தகவல் தொழில்நுட்ப (ஐடி) பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (பிப்ரவரி 7) சரிவில் முடிந்துள்ளன.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 34.09 புள்ளிகள் அல்லது 0.05 சதவீதம் குறைந்து 72,152 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 1.10 புள்ளிகள் அல்லது 0.01 சதவீதம் உயர்ந்து 21,930.50 ஆகவும் முடிந்தது.
நிஃப்டி வங்கி, நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் நிஃப்டி ரியாலிட்டி ஆகியவை வர்த்தகத்தை ஏற்றத்துடன் முடித்தன. நிஃப்டி ஐடி 1.25 சதவீதம் சரிந்தது.
நிஃப்டி50 யில் எஸ்பிஐ, கிராசிம், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய ஐந்து நிறுவனங்கள் இன்று அதிகபட்ச லாபத்தை ஈட்டின.
கேபிஎஸ் துணை நிறுவனத்தை ரூ.708.07 கோடிக்கு கையகப்படுத்துவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்ததை தொடர்ந்து, சென்செக்ஸ் நிறுவனங்களில், அதன் பங்கு வர்த்தகம் 3.78 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி நிறுவன பங்குகளின் சரிவு காரணமாக நிப்டி பங்கு வர்த்தக குறியீடுகள் இன்று வீழ்ச்சியில் முடிந்தன. ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிதியாண்டு 2024 வருவாய் கணிப்புகளை எதிர்பார்த்ததை விட குறைவாக அறிவித்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டது.
டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான Paytm நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளை சந்தித்தார். அதனால் அதன் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதில் மாறுபாடு ஏற்படும் என்று கருத்து நிலவும் நிலையில், முதலீட்டாளர்கள் அதற்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பங்கு வர்த்தகம் சரிவில் முடிந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விவாகரத்து செஞ்சு 3 வருஷம் ஆச்சு… ‘திருமகள்’ நிவேதிதா விளக்கம்!
ICC Rankings : முதன்முறையாக ’முதலிடம்’ பிடித்த இந்திய பவுலர்!