சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 21 ) வெளியிட்டுள்ளது.
நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது.
நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ கூறியது.
மேலும், நேற்று (ஆகஸ்ட் 20 ) இஸ்ரோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் இறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதன் நேரலைக்காட்சிகளை ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் தொலைக்காட்சியில் காண்பதற்கான லிங்குகளையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) இஸ்ரோ சந்திராயன் – 3 நிலவில் தரையிறங்கும் பகுதியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பாறாங்கற்கள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாமல் இறங்கும் போது பாதுகாப்பான தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய இந்த புகைப்படங்கள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருப்பதி நவம்பர் மாத தரிசனம்: எந்த தேதியில் எதற்கான டிக்கெட்டை பெறலாம்?
டி20: தொடரை வென்றது இந்திய அணி!
இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!