இன்று ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கு என்னாச்சு?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் "ஸ்மாட் சேட்டிலைட் லான்ஞ் வெகிக்கிள்” இன்று ( ஆகஸ்ட் 7 ) காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டானது மைக்ரோ, நானோ என 500 கிலோ எடையுள்ள செயற்கை கோள்களை விண்ணில் சுமந்து செல்லும் திறனுடயது. , சிறிய அளவிலான செயற்கைகோள்களை அனுப்புவதற்கான முற்சியாகத் தான் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ”இ.ஓ.எஸ் – 02, ஆசாதி சாட்” ஆகிய இரண்டு செயற்கை கோள்களை விண்ணில் சுமந்து சென்றுள்ளது. கடலோர நிலங்களின் பயன்பாடு மற்றும் பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபட தயாரிப்பு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது. , 750 பள்ளி மாணவர்களால் எட்டு கிலோ எடை கொண்ட அசாதி சாட் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ”இ.ஓ.எஸ் – 02, ஆசாதி சாட்” ஆகிய இரண்டு செயற்கை கோள்களை சுமந்தபடி இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
ராக்கெட் விண்ணில் பறந்த சில மணி நிமிடங்களில் ராக்கெட்டில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவில், "எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே அமைந்தன. டெர்மினல் கட்டத்தில் தரவு இழப்பு காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் புதுப்பிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், "ராக்கெட் அனுப்புவதில் சில தரவு இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் தரவை பகுப்பாய்வு செய்து வருகிறோம். நிலையான சுற்றுவட்டப்பாதையை ராக்கெட் அடைந்துவிட்டதா என்பதை நாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
– செல்வம்
கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் மரணம்!