வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்புவுக்கு சொகுசு காரையும், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்பீல்டு பைக்கையும் பரிசாக வழங்கினார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
அந்தவகையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
இப்படம், ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து, தொடர்ந்து இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சக்சஸ் மீட் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று (செப்டம்பர் 24) நடந்தது.
இந்த நிகழ்வில் சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன், விடிவி கணேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு toyota vellfire காரை பரிசளித்தார்.
7 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார் 2494 சிசி இன்ஜின் அமைப்பைக் கொண்டது. இந்த காரின் விலை ரூ.93 லட்சம் ஆகும்.
அதேபோல் படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு பைக்கை பரிசளித்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதால், அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
அமெரிக்காவில் சாதனை படைத்த ’பொன்னியின் செல்வன்’!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
Extra 1 crore loss for producer