Is using Kajal safe for eyes?

பியூட்டி டிப்ஸ்: காஜல் உபயோகிப்பது கண்களுக்குப் பாதுகாப்பானதா?

டிரெண்டிங்

சிலர் தினமும் கண்களுக்கு காஜல் உபயோகிப்பார்கள். மேலும் சிலர் காலை முதல் இரவு வரை கலையாமலிருக்க ‘லாங் ஸ்டே’ காஜல் உபயோகிப்பார்கள்… இது கண்களுக்குப் பாதுகாப்பானதா? அழகுக்கலை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Is using Kajal safe for eyes?

இப்போதெல்லாம் அழகு சாதன உபயோகத்தில் 24 மணி நேர மேக்கப், லாங் ஸ்டே, வாட்டர் ப்ரூஃப் போன்ற வார்த்தைகளை அதிகம் கேள்விப்படுகிறோம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது மேக்கப் சீக்கிரம் கலையக்கூடாது என பலரும் விரும்புகிறார்கள். கண் மையில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை அனைத்திலும் நீண்டநேரம் அப்படியே இருக்கும்படியான தயாரிப்புகள் வருகின்றன.

இத்தகைய அழகு சாதனங்களில் எண்ணெய்ப்பசை குறைவாக இருக்கும். எண்ணெய்ப்பசை அதிகமாக இருக்கும் நிலையில் அந்த அழகு சாதனம் நீண்டநேரம் தாக்குப் பிடிக்காது. உதாரணத்துக்கு கண் மை… அந்தக் காலத்தில் விளக்கெண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவை சேர்த்து கண் மை தயாரித்தார்கள். எண்ணெய்ப்பசை சேர்வதால் அந்த மை சீக்கிரம் அழிந்துவிடும்.

இப்போது வரும் காஜல் எனப்படும் கண் மையில் எண்ணெய்ப்பசை மிகக் குறைவாக இருக்கிறது. கூடவே வேறு சில கெமிக்கல்களும் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரோ, வியர்வையோ பட்டாலும் கலையாது. பார்வைக்கும் அழகாக இருக்கும். ஆனாலும் அது ஆரோக்கியமானதல்ல.

இரவு தூங்குவதற்கு முன் கிளென்சரோ, மேக்கப் ரிமூவரோ, மிஸ்ஸெல்லர் வாட்டரோ (Micellar water) உபயோகித்து மேக்கப்பை முற்றிலும் நீக்கிவிட்டுதான் தூங்க வேண்டும். குறிப்பாக கண் மையை முழுமையாக நீக்கிவிட வேண்டும். மேக்கப்பை நீக்க உதவும் இந்தப் பொருள்கள் சருமத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவை என்பதால் கண்களுக்குள் பயன்படுத்தவும் பாதுகாப்பானவை.

லாங் ஸ்டே காஜல் பயன்படுத்துவதில் பயம் இருந்தால் வீட்டிலேயே கண் மை தயாரித்து உபயோகிக்கலாம். அது கெமிக்கல் இல்லாதது என்பதால் கண்களுக்குப் பாதுகாப்பானதும்கூட.

ஒரு விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு, திரி போட்டு ஏற்றவும். சுத்தமான சந்தனத்தை கல்லில் லேசாக தண்ணீர் விட்டு இழைத்துக்கொள்ளவும். அந்த சந்தன விழுதை இரும்புக் கடாய் ஒன்றில் முழுவதுமாகத் தடவிவிட்டு, அந்தக் கடாயை விளக்கின் மேல் கவிழ்த்து மூடிவிடவும்.

விளக்கின் சூடு பட்டு சந்தனம் கறுப்பாக மாறும். கடாயின் எல்லாப் பக்கங்களிலும் சூடு படும்படி கடாயைத் திருப்பிவிடவும். கறுப்பாக மாறிய சந்தனத்தில் ஒன்றிரண்டு துளிகள் விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து சுத்தமான டப்பாவில் நிரப்பி வைக்கவும். இந்த மையை, கண்களுக்கு மையாகப் பயன்படுத்தலாம். தவிர, தலைக்கு டை அடிக்க முடியாத அவசரத்தில் டச் அப் செய்யவும் உபயோகிக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியானதும்கூட.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திண்டுக்கல் கைது… திக் திக்கில் அமைச்சர்கள்: CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?

நான்கு மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

ED அலுவலகத்தில் ரெய்டு : மேலும் ஒருவர் கைது!

முக்கியமான மெசேஜ் மிஸ் ஆகிடுச்சே: அப்டேட் குமாரு

Is using Kajal safe for eyes?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *