ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பலர் கண்களுக்கு அடியில் கரு வளையங்களால் பாதிக்கப்படுகிறார்கள்? இதற்கு காரணம் என்ன? எளிய தீர்வு உண்டா? சரும மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, மரபியல், ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, அளவுக்கதிக ஸ்கிரீன்டைம், காஜல் பயன்பாடு என எதுவும் காரணமாக இருக்கலாம். இவற்றில் எந்தக் காரணமாவது இருக்கிறதா என்று முதலில் பாருங்கள். மரபியல் காரணம் தவிர மற்றவற்றை நம்மால் நிச்சயம் மாற்ற முடியும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் பொடி, மஞ்சிஷ்டா பொடி, ரத்தச் சந்தனப் பொடி ஆகியவற்றை வாங்கி, தலா ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் சிட்டிகை ஏலக்காய்த்தூளும் சிட்டிகை குங்குமப்பூவும் சேர்த்து, சில துளிகள் வைட்டமின் ஈ ஆயிலும், நல்லெண்ணெயும் விட்டுக் குழைக்கவும். வைட்டமின் ஈ ஆயில் இல்லாதவர்கள், வைட்டமின் ஈ ஆயில் கேப்ஸ்யூலை உடைத்து அதிலுள்ள ஆயிலை பயன்படுத்தலாம்.
இந்தக் கலவையை கண்களுக்கடியில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, வெறும் தண்ணீரில் கழுவவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே கண்களுக்கு அடியிலுள்ள கருமை நீங்கும். இது தவிர்த்து, ரத்தச்சோகை இருந்தால் அதைச் சரி செய்ய வேண்டும். போதுமான தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஸ்கிரீன் டைமை குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்கா ஒரு ஐடியாவோட வந்துருக்கு போல : அப்டேட் குமாரு
”நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்னும் நான்” : ஹாட்ரிக் அடித்த மோடி