நம்மில் பலர் காலை உணவு சாப்பிடுவதில் அவ்வளவு அக்கறை காட்டுவது இல்லை. பசியெடுத்தால் ‘டீ’யும் பன்’னும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். காலை உணவுக்கு இவை மட்டும் போதுமா?
“காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகத் தவறான நடைமுறை. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள் மிகமிக முக்கியம். இதில், ஏதாவது ஒரு சில சத்துக்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல.
வெறும் டீ, பன் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், மாவுச் சத்து மட்டுமே கிடைக்கும். இளவயது என்பதால், உடலில் எந்தவித நோயும் வராமல் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். 40 வயதுக்கு மேல் வரும் பல நோய்களுக்கு, சரிவிகித உணவு சரியாக எடுத்துக்கொள்ளாதது முக்கியக் காரணம்.
எனவே, காலை உணவை சரியாக 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக உண்ணப் பழகுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்கள் என உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் அந்த உணவில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வயது ஏறினாலும், உடல் வலுவோடு இருக்கும்” என்கிறார்கள் உணவு ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ரோஜாப்பூக் கன்னங்களுக்கான ரோஸ் வாட்டர்… நீங்களே செய்யலாம்!
விசிகவில் புதிய மா.செக்கள்… -பழையவர்கள் மீது கை வைக்காத திருமா- என்ன பின்னணி!
முடிவுக்கு வரும் அதிமுக பாஜக பிரேக் அப் : அப்டேட் குமாரு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை!