பியூட்டி டிப்ஸ்: ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தலை நார்மலாக மாற்றுவது  நல்லதல்ல!

ஆர்வக்கோளாறு காரணமாக ஒரு சிலர் கூந்தலை ‘ஸ்ட்ரெயிட்டனிங்’ செய்து கொள்வார்கள். பிறகு ‘அது எனக்குப் பொருத்தமாக இல்லாதது போல உணர்கிறேன். என் ஹேர் ஸ்டைலை மீண்டும் பழையபடி மாற்றிக் கொள்வோம்’ என்று நினைப்பார்கள். இப்படி ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தலை நார்மலாக மாற்றுவது  நல்லதா?  அது கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிக்குமா? அழகுக்கலை ஆலோசகர்கள் சொல்வது என்ன?

`ஸ்ட்ரெயிட்டனிங்’ என்பது கெமிக்கல்கள் வைத்துச் செய்யப்படுகிற ஒரு சிகிச்சை. ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தலை மீண்டும் ‘பெர்ம்’ சிகிச்சை செய்தால்தான் அது ஓரளவு அலை அலையாக மாறும். அதுவும் கெமிக்கல்கள் வைத்துச் செய்யப்படுகிற சிகிச்சைதான்.

எனவே உடனுக்குடன் இப்படி ஸ்ட்ராங்கான கெமிக்கல்கள் வைத்து கூந்தலை மாற்றுவது கூந்தலுக்கு ஆரோக்கியமானதல்ல. அப்படிச் செய்தால் கூந்தல் உடைந்து, உதிரும். கூந்தல் மிகவும் பலவீனமாகும்.

பெர்ம் செய்த கூந்தலைக்கூட ஸ்ட்ரெயிட்டாக மாற்றுவது ஓரளவு சாத்தியம். ஆனால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தலை உடனடியாக மீண்டும் நார்மலாக மாற்றுவது சிரமம்.

எனவே ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தல் வளர்ந்து வரும்போது அதை வெட்டிவிடுவதுதான் வழி. எனவே இதுபோன்ற சிகிச்சைகளைச் செய்துகொள்வதற்கு முன் உங்கள் அழகுக்கலை ஆலோசகரிடம் அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என ஒன்றுக்கு இருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வதே நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்; இதை மிஸ் பண்ணாதீங்க!

அனிமல் : விமர்சனம்!

ஆரஞ்சு அலர்ட்டு அமலாக்கத்துறைக்கு தான் : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வலையில் சிக்கிய ED – அமித்ஷாவை அதிரவைத்த திண்டுக்கல் ஆபரேஷன்! சேஸிங் பின்னணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts