ஹெல்த் டிப்ஸ்: சிறுநீரில் வாடை… நோயின் அறிகுறியா?

Published On:

| By christopher

Is smelly urine a sign of illness?

சிறுநீர் கழிக்கும்போது சில சமயங்களில் சிலருக்கு ஒருவித வாடை வரும். இது நோய் இருப்பதற்கான அறிகுறியா? சிறுநீர் வாடைக்கு என்ன காரணம்? இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார்கள் சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர்கள்.

“உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டால், அப்படி சில மருந்துகள் சிறுநீரில் வாடையை ஏற்படுத்தலாம். வாடையோடு சேர்த்து வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள்.
அதாவது, வாடை தவிர, சிறுநீரில் எரிச்சலோ, சிறுநீர் கழிக்கும்போது வலியோ, அடிவயிற்றில் வலியோ, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோ, கலங்கலாக வெளியூறுவதோ இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருந்தால், உங்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம் என சந்தேகப்படலாம்.

நாம் உண்ணும் உணவுகளும் சிறுநீரின் நிறம் மற்றும் மாற்றக்கூடும். உதாரணத்துக்கு, பீட்ரூட் சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரின் நிறம் மாறும். குறிப்பிட்ட உணவு அல்லது பானம் எடுத்துக்கொள்ளும் போதெல்லாம் சிறுநீரில் வாடையை உணர்கிறீர்களா என்று கவனியுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்காதது இரண்டும் சிறுநீரின் நிறம் மற்றும் வாடையை மாற்றலாம். யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட் எல்லா லேப்களிலும் செய்யப்படும். அதைச் செய்து பார்ப்பதன் மூலம், எப்படிப்பட்ட அணுக்கள் வெளியேறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். ரிசல்ட்டை பொறுத்து, தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட வேறு சோதனைகளைச் செய்து கொள்ளலாம். இன்ஃபெக்‌ஷன் இருப்பது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று விளக்கமளிக்கிறார்கள். Is smelly urine a sign of illness?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share