Is Prabhakaran's daughter Dwarka speaking?

பேசுவது பிரபாகரன் மகள் துவாரகாவா?

டிரெண்டிங்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய மகள் துவாரகா பிரபாகரன் பேசுவதாக இன்று (நவம்பர் 27) வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரு வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. Is Prabhakaran’s daughter Dwarka speaking?

இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு தனி ஈழ நாடு அமைப்பதற்காக ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கம், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி விடுதலைப் புலிகள் போரில் கொல்லப்பட்ட தங்களது வீரர்களுக்காக மாவீரர் தினம் என்று கடைபிடித்தனர். 2009க்குப் பிறகு வரும் ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் பிரபாகரன் நேரில் வரப் போகிறார், உரையாற்றப் போகிறார் என்று பரபரப்புகள் கிளம்பும். ஆனால் பிரபாகரன் இதுவரை வரவில்லை,.

இந்த பின்னணியில் 2023 நவம்பர் 27 மாவீரர் தினத்தில் பிரபாகரன் மகள் துவாரகா பேச இருக்கிறார் என்று தகவல் பரவியது.

அதேபோல இன்று (நவம்பர் 27) மாலை பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

அதில், “தமிழ் ஈழ தேசத்துக்கு பக்க பலமாக இருக்கும் தாய் தமிழ் உறவுகளூம் உலக நாடுகளும் எமக்காக குரல் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது. எங்கள் தியாகம் ஒரு நாளும் வீண் போகாது. மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கேற்ப அரசியல் வழியில் அற நெறி நின்று தொடர்ந்து போராடுவோம், எல்லா வகை போராட்டங்களிலும் அரசியல் போராட்டம் மிக கடினமானது. உலகம் முன் வைக்கக் கூடிய அரசியல் தீர்வுகளை பரிசீலித்துப் பார்க்க எமது தேசம் தயாராக இருக்க வேண்டும்” என்றெல்லாம் அந்த வீடியோவில் தோன்றிய பெண் பேசுகிறார். அவர் துவாரகா சாயலில் இருப்பதால் அவர் துவாரகாதான் என்று சிலர் சொல்கிறார்கள்.

அதேநேரம், ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில் நுட்பப்படி இப்படி ஒரு சித்திரிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் கருத்துகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஷால் 34 டைட்டில் அப்டேட் இதோ!

இது தான் ஜன் கி பாத் தெரியுமா?: அப்டேட் குமாரு

Is Prabhakaran’s daughter Dwarka speaking?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0