ஹெல்த் டிப்ஸ்: இரவு நேர உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

டிரெண்டிங்

கடந்த பத்தாண்டுகளாக உடற்பயிற்சி குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வின் விளைவாக எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சி நிலையங்கள் பெருகிவிட்டன. இதில், காலை நேர அலுவலகப் பணி காரணமாக இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களையும் பார்க்கலாம்.

உடற்பயிற்சி ஆரோக்கியமானது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

இரவு நேர உடற்பயிற்சி ஏற்றுக்கொள்ள கூடியதுதான் எனக் கூறும் மருத்துவர்கள் கூடவே சில எச்சரிக்கைகளையும் விடுக்கின்றனர்.

“இரவு நேர உடற்பயிற்சி நிச்சயம் நமது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நமது உடல் வெப்பநிலையை அதிகரித்து அட்ரினலின், எண்டார்ஃபின் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

இதன் காரணமாக உடற்பயிற்சிக்குப் பின் உறக்கம் வருவது தாமதமாகிறது” என்று கூறுகிறார்கள். மேலும், இவ்வாறான சூழலில் உறங்குவதற்கு முன் இதமான நீரில் குளிப்பது நன்மை தரும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

2020இல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் மிதமான உடற்பயிற்சி தூக்கத்தைத் தொந்தரவு செய்யாது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாலை நேரத்தில் மிதமான அளவிலான உடற்பயிற்சிகள் நம் உறக்கத்தை மேம்படுத்தும் என 2019இல் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. அதேநேரம் மாலையில் கடினமான உடற்பயிற்சிகள் கூடாது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2023இல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி முடிவில், இரவில் நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் உறக்கத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பி.எஸ்.என்.எலையும் வித்துருவாங்களா? : அப்டேட் குமாரு

பகுஜன் சமாஜ் தலைவர் ஆகிறாரா பா.ரஞ்சித்?

நெல்லையின் புதிய மேயர் யார்? மீண்டும் வஹாப் கையில் பந்து!

அஸ்ரா கார்க்…அமல்ராஜ்… : 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *