கீர்த்தி சுரேஷுக்கும் அனிருத்துக்கும் திருமணமா?

சினிமா டிரெண்டிங்

இசையமைப்பாளர் அனிருத்துடன் தனது மகளுக்கு திருமணமா? என்பது குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்தின் மூலம் தேசிய விருதை பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது நடிப்பில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவருக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும்   திருமணம் என்று கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் பரவி வந்தன. அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின .

இந்த நிலையில் ஜவான் பட இசையமைப்பாளரான அனிருத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று மீண்டும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவியது.  இதுதொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

“அனிருத்துக்கும் எனக்கும் திருமணம் என்பது தவறான செய்தி. அனிருத் எனக்கு நல்ல நண்பர்” என்று பதில் அளித்திருந்தார்.

எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, “ஒரு கட்டத்தில் நடக்கும்” என்றும் கூறியிருந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் தந்தை தனது மகள் திருமணம் தொடர்பாக ottplay.com என்ற இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “இணையத்தில் பரவும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையல்ல.

இதுபோன்று பல செய்திகள் வந்துள்ளன. அனிருத்தையும் கீர்த்தி சுரேஷையும் பற்றி செய்திகள் வருவது முதன் முறையல்ல. எனது மகளை தொடர்புபடுத்தி பல செய்திகள் வந்துள்ளன. இதில் சிறிதும் உண்மை இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இருக்கும் அனிருத் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *