பியூட்டி டிப்ஸ்: சாதம் வடித்த கஞ்சி – தலைமுடிக்குப் பயன்படுத்துவது சரியா?

Published On:

| By Selvam

ரைஸ் வாட்டர் ஃபேஸ்வாஷ், ரைஸ் வாட்டர் ஷாம்பூ என்றெல்லாம் இப்போது பிரபலமாகி வருகிறதே… இவற்றை உபயோகிக்கலாமா? சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கும் பயன்படுத்துவது சரியானதா… வீட்டிலேயே சாதம் வடித்த கஞ்சியைப் பயன்படுத்துவதானால், எப்படிப் பயன்படுத்த வேண்டும்? சருமநல மருத்துவர்கள் சொல்லும் பதில் என்ன?

“அரிசித் தவிடு, சாதம் வடித்த கஞ்சி, அரிசி களைந்த தண்ணீர் என அரிசி சம்பந்தப்பட்ட  பொருட்கள் அழகு சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படுவது உண்மைதான். காரணம், அவற்றிலுள்ள ஃபீனால் மற்றும் ஸ்குவாலின் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்தான். ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் என்பவை தாவரங்களிலிருந்து பெறப்படும் சத்துகள்.

வீட்டிலேயே உபயோகிக்கக்கூடிய மஞ்சள், சந்தனம், எலுமிச்சை சாறு போன்றவற்றை எல்லோரும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்துவோம். ஆனால், ரைஸ் வாட்டரை பொறுத்தவரை அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லோருமே பயன்படுத்தக்கூடிய அளவுக்குப் பாதுகாப்பானது. அது அலர்ஜியை உண்டாக்காது.  சருமத்தில் எரிச்சல், சிவந்துபோவது போன்றவற்றை  ஏற்படுத்தாது.

தலைக்குக் குளிக்கும்போது கடைசியாக சாதம் வடித்த கஞ்சியால் கூந்தலை அலசலாம். அந்தக் கஞ்சியில் ஓட்ஸை ஊறவைத்தும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி  ரைஸ் வாட்டர் ஷாம்பூ, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை உபயோகிப்பதற்கு முன்,  அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள், கெமிக்கல்கள் குறித்து உங்கள் சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பயன்படுத்தலாம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மனைவிக்கு தங்க நகை வாங்கிய கணவர்… ஜாக்பாட்டில் ரூ.8.5 கோடி சம்பாதித்தார்!

டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள்: நீதிபதிகள் வேதனை!

’இன்னும் வடியாத வெள்ளம்… மக்களை பரிதவிக்க விடும் ஆட்சியாளர்கள்’ : திமுக அரசு மீது விஜய் ஆதங்கம்!

வடியாத வெள்ளம்… குடி தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்!