ஜலதோஷம் பிடித்திருக்கும்போது சிலவற்றைச் சாப்பிட வேண்டும்… அதுவே, காய்ச்சல் வந்தால் பட்டினி கிடக்க வேண்டும் என்பார்கள். இப்படி உடல்நலமில்லாதபோது பட்டினி கிடப்பது ஆரோக்கியமானதா? இயற்கை மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் என்ன?
“நம் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றை கவனித்துப் பாருங்கள். உடல்நலம் சரியில்லாவிட்டால், அதற்கு மிகப் பிடித்த உணவைக் கொடுத்தாலும் சாப்பிடாது. செரிமானம் சரியில்லை என உணர்ந்தால் வெளியே போய், புல், இலை போன்ற எதையாவது சாப்பிட்டு, சற்று நேரத்தில் வாந்தி எடுத்துவிடும். அப்படி தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும். ஆனால், உடம்பு சரியில்லாவிட்டாலும் சாப்பிடக்கூடிய ஒரே ஜீவன் மனிதன்தான்.
இந்த நிலையில் உடல்நலமில்லாதபோது பட்டினி கிடப்பது என்பது மிகச் சிறந்த மருத்துவம் என்பதில் சந்தேகமில்லை. பட்டினி கிடப்பது நல்லதுதான் என்றாலும் அன்றைய தினத்தில் எதையுமே சாப்பிடாமல் இருப்பதும் கூடாது. அழுக்கான இடத்தைச் சுத்தப்படுத்த தண்ணீர் எவ்வளவு முக்கியமானதோ, அப்படித்தான் நச்சுகள் படிந்த நம் உடலும். எனவே, பட்டினி இருக்கும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் இருக்கும்போது நிறைய தண்ணீர், ஜூஸ், இயற்கை உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் சீசன் 8 : வெற்றி மேடையில் முத்துக்குமரன் செய்த சம்பவம்!
அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு
சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: மகளிர் உரிமைத் தொகை உயர்வு! ஸ்டாலின் mega மாஸ்டர் பிளான்!