நம்மில் பலர் பசித்த பிறகு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்… சிலர் நேரம் தவறாமல் சாப்பிடுவதைக் கடைப்பிடிக்கிறார்கள். எது சரி? டயட்டீஷியன் சொல்லும் பதில் என்ன?
“பசித்த பிறகு சாப்பிடுவதுதான் எப்போதும் சரியானது. பாரம்பரிய முறைப்படியும், ஆயுர்வேத முறைப்படியும் இதுதான் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகச் சொல்லப்படுகிறது.
காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ எதுவானாலும் அது செரிமானமாக, குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எனவே, அதன் பிறகு, அடுத்த வேளை உணவைச் சாப்பிடுவதுதான் சரியானது.
ஆனால், சிலருக்கு அசிடிட்டி எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சினை இருக்கும். அதனால் அவர்களுக்கு அல்சர் வரும் வாய்ப்பும் இருக்கும்.
அது தவிர நீரிழிவு உள்ளவர்கள், நீரிழிவுக்காக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், அஜீரணம், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் ஒருவேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையே நீண்ட நேரம் இடைவெளி விடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்னும் சிலருக்கு விரதம் இருப்பதே சாத்தியமில்லை என்ற நிலை இருக்கும்.
இவர்கள் ‘என்னால் ஒருவேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியோ, வாந்தி, மயக்கம் போன்றவையோ வந்துவிடும்’ என்பார்கள்.
இவர்களும் உணவின் இடையே நீண்ட நேர இடைவெளியைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் பசித்த பிறகு சாப்பிடலாம்.
சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும்தான் நம் செரிமான ஆற்றல் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, காலையும் மதியமும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை மிதமாகவும், 7 மணிக்குள்ளும் சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்கும்.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிடுவதில்லை என்ற கொள்கையோடு இன்றும் சில சமூகத்தினர் இருப்பதைப் பார்க்கலாம்.
அந்த உணவுமுறைதான் இன்று `இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது. மிகச் சிறப்பான இந்த உணவுமுறை, உண்மையில் நம் பாரம்பரியத்தில் ஒன்றாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா
‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு!
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்துக்கேற்ற ஆடையும் ஹேண்ட் பேக்கும்!
ஹெல்த் டிப்ஸ்: அதிகமாக வியர்ப்பது எடைக் குறைப்புக்கு உதவுமா?