பார்லருக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளும் எண்ணம் பலருக்குண்டு. அப்படி ஃபேஷியல் செய்து கொள்வது பலனளிக்குமா? Is it okay to do a facial at home?
“நிச்சயம் பலனளிக்கும். ஆனால், அதற்கு முன்பாக… பருக்கள் அதிகமுள்ளோருக்கான கிட், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான கிட், எண்ணெய்ப் பசையான சருமம் கொண்டவர்களுக்கானது என செல்ஃப் ஃபேஷியல் கிட்டில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் உங்கள் சருமத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் சருமம் எண்ணெய்ப்பசையானதா, வறண்டதா, நார்மலானதா, சென்சிட்டிவ்வானதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரிந்து அதற்கேற்ற ஃபேஷியல் கிட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படி உங்களுக்கு சருமத்தில் குறிப்பிட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றால் நார்மல் சருமத்துக்கான ஃபேஷியல் கிட்டை வாங்கிப் பயன்படுத்தலாம். தரமான தயாரிப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
ஸ்பெஷல் ஃபேஷியலுக்கான கிட்டும் நிறைய கிடைக்கிறது. உதாரணத்துக்கு ஸ்கின் வொயிட்டனிங், ஸ்கின் பிரைட்டனிங் என்றெல்லாம் பிரத்யேகமாகக் கிடைக்கும். உங்கள் தேவையறிந்து அதை வாங்கலாம்.
ஃபேஷியல் கிட்டின் பின்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள் இருக்கும். உபயோகிப்பதற்கு முன் அவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். க்ளென்சர், ஸ்க்ரப், டோனர், மசாஜ் ஜெல் அல்லது மசாஜ் க்ரீம், ஃபேஸ்பேக் போன்றவை இருக்கும். ஃபேஷியல் செய்வதற்கான ஸ்ட்ரோக்ஸ் படங்களும் கிட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். செல்ஃப் ஃபேஷியலில் ஸ்டீம் செய்வதைத் தவிர்த்துவிடலாம். Is it okay to do a facial at home?
வீட்டில்தானே செய்துகொள்கிறோம் என்பதற்காக வாரம் ஒருமுறை செய்துகொள்வதெல்லாம் தேவையற்றது. உங்கள் வயது, சருமத்தின் தன்மைக்கேற்ப, பதினைந்து நாள்களுக்கொரு முறை அல்லது மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்கள் அடிக்கடி செய்துகொள்ளக் கூடாது. ரொம்பவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் பதினைந்து நாள்களுக்கொரு முறை செய்து கொள்ளலாம்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்சூரும் மணிப்பூரும்: அப்டேட் குமாரு
WorldCup2023: ’எரியும் நெருப்பில் எண்ணெய்…’ ஷமியின் முன்னாள் மனைவிக்கு குவியும் கண்டனம்!
மாஜிக்கள் மீது ஆளுநர் ஆக்ஷன்… எடப்பாடி ரியாக்ஷன்!
கோயிலில் யாகம் செய்ய கோடிக்கணக்கில் பட்ஜெட்… சர்ச்சையில் என்எல்சி சேர்மன்!