50 வயதுக்கு மேல் உள்ள பலருக்கும் திடீர் ஜிம் ஆசை வருவதை சமீப காலத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. எலும்புகளும் தசைகளும் தளர்ச்சியடையும் நேரத்தில் உடல் எடையைக் குறைக்க நினைத்து அத்தனை வருடங்களாக பழக்கமே இல்லாத ஜிம் வொர்க் அவுட்டுக்கு தயாராகிறார்கள்.
“இந்த நிலையில் திடீரென உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மேலும், “உடற்பயிற்சி என்பது இள வயதிலிருந்தே வாழ்க்கை முறையில் ஓர் அங்கமாகப் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், பலரும் அந்த வயதில் அதை அலட்சியம் செய்துவிட்டு, வயதான பிறகே அக்கறை கொள்கிறார்கள்.
நடுத்தர வயதில் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும். அதைப் பற்றி கவலைப்படாமல் உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள்.
உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியை செய்யுங்கள். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் நடைப்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம்.
அப்படியே 50 வயதுக்கு மேல் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும் அளவுக்கதிமாக, கடுமையாக வொர்க் அவுட் செய்ய வேண்டாம்.
குறிப்பாக, கார்டியோ பயிற்சிகளை அளவாகவே செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளை 20 நிமிடங்கள் செய்துவிட்டு, பிறகு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் ஃப்ளோர் எக்சர்சைஸையும் செய்யலாம்.
இந்த வயதில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழக்கும். அதனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஃபிராக்ச்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்படும் ரிஸ்க் அதிகம்.
எனவே, ஜிம் சென்று கடுமையான வொர்க் அவுட் செய்வதற்கு பதில் வாக்கிங் செய்வது பாதுகாப்பானது. ஜிம் செல்வதில் உறுதியாக இருந்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுங்கள்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடைபெற்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா
சிதம்பரம் கோவில் கிரிக்கெட் பிரச்சனை… தீட்சிதர் விளக்கம்!
’‘அனிமல் ‘ படத்தால் நிறைய அழுதேன் ‘ : நடிகை திருப்தி டிமிரி
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!