ஜிம்முக்குச் செல்கிறவர்களும், வொர்க்-அவுட் பழக்கம் கொண்டவர்களும் காய்ச்சாத பாலை உட்கொள்வதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அதே போல மில்க் ஷேக், ரோஸ்மில்க் என்ற பெயரில் காய்ச்சாத பாலை நுரை வருவதற்காக அப்படியே ஊற்றுவதை குளிர்பானக் கடைகளில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. Is it healthy to consume raw milk?
இந்த நிலையில், “காய்ச்சிய பால் மட்டுமே துரிதமான செரிமானத்துக்கு உதவும். தொந்தரவு தரும் தொற்றுக் கிருமிகளின் பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காக்கும் என்பதை உணர்தல் அவசியம். எந்தப் பாலாக இருந்தாலும் முதலில் காய்ச்சியே பருக வேண்டும்.
இன்றைய பால் பாக்கெட் காலத்தில் நமக்குக் கிடைப்பவை எல்லாமே `பாஸ்ச்சரைஸ்டு மில்க்’ (Pasteurized milk) தான். அதாவது கிருமிகள் நீக்கப்பட்ட பால்தான் இப்போது விற்பனையாகிறது.
இந்த பாக்கெட் பாலை அதிகாலை 4 மணிக்கு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைத்துவிடுகிறார்கள். நம் வீட்டுக்கு பால் பாக்கெட் வருவதற்கு சராசரியாக 6 மணிக்கும் மேலாகிவிடுகிறது.
இந்த 2 மணி நேரத்துக்கும் மேல் பாலுக்கு குளிர்ச்சித்தன்மை இல்லை. இந்த இடைவெளியில் Cold chain அறுந்துவிடுவதால் தொற்று ஏற்படும் சாத்தியம் உண்டு. அதனால் பாலைக் காய்ச்சுவது கட்டாயம் என்கிறார்கள்” பொதுநல மருத்துவர்கள்.