கோடைக்காலத்தில் குளிர்ச்சியான நீர் அருந்தும் பலர் மழை மற்றும் குளிர்காலங்களில் வெந்நீர் அருந்துவார்கள். இன்னும் சிலர் வெந்நீர் குடிப்பதுதான் ஆரோக்கியமானது என்று எல்லா காலங்களிலும் வெந்நீர் அருந்துவார்கள். இப்படி, எப்போதும் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமானதா?
“எப்போதுமே வெந்நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் வெந்நீரே குடிப்பதால் சளி பிடிக்காது என நினைப்பார்கள். அது தவறு. தொண்டைக் கரகரப்பு இருப்பவர்கள் வெந்நீர் குடிக்கலாம். மற்றவர்களுக்கு அது தேவையில்லை. அதிக சூடான நீர் அருந்துவது தொண்டையில் உள்ள மியூக்கோஸா படலத்தை பாதிக்கும். அதிக குளிர்ச்சியாகவோ, அதிக சூடாகவோ நீர் அருந்தும்போது, உடனே உடல் வெப்பநிலை மாறும்.
இப்படிக் குடிக்கும்போது தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்து, உடலில் நீர் வறட்சி ஏற்படும். எனவே, நம் உடலுக்குத் தேவையான தூய்மையான சாதாரண வெப்பநிலையில் உள்ள நீர் அருந்துவதே நல்லது.
இதேபோல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது சரியானதல்ல. சாதாரண டெம்பரேச்சரில் உள்ள தண்ணீரைக் குடித்துவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். அதன் பிறகும் சிறிது சாதாரண தண்ணீர் குடிக்கலாம். ஜில்லென்ற ஐஸ்க்ரீம் சட்டென தொண்டைக்குள் இறங்கும்போது சிலருக்கு உடனே மூக்கடைத்துக் கொள்ளலாம். மற்றபடி ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பதும் தவறான நம்பிக்கையே” என்கிறார்கள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் வேட்டையன் டிரைலர் ரிலீஸ் வரை!
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்தலைத் தடுக்கும் பீர்க்கங்காய் ஜூஸ்!
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!
அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அட்மிட்!