தென்னிந்தியாவில் கேரள மாநிலம், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தேங்காய் எண்ணெயை தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் நிலையில், தேங்காய் எண்ணெய் எல்லாருக்கும் ஏற்றதா… இப்படி தினசரி பயன்படுத்துவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே… இது உண்மையா என்கிற சந்தேககம் பலருக்கு உண்டு. இதற்கு தீர்வாக டயட்டீஷியன்ஸ் என்ன சொல்கிறார்கள்?
“கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது.
தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும். அது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டாம். ஆனால், தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்துச் சமைப்பதோ, பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது.
எனவே, தினசரி சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது ஜீரணிக்க எளிதானது. அதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதுதான்” என்று விளக்கமளிப்பவர்கள், மேலும்…
“வயிறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களும், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்களும் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். அதேபோல ஆயில் புல்லிங் செய்யவும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இது உதவும்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கூந்தலை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்” என்று சமையல் தவிர, மற்ற பயன்பாட்டுக்கும் தேங்காய் எண்ணெயைப் பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ரஷ்யன் சாலட்!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை
வாங்குற வாண்டி: அப்டேட் குமாரு