தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் தலைக்குக் குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இரவில் தலைக்கு குளிக்கும்போது, நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இரவில் தலைக்கு குளிக்கும் வழக்கம் சரிதானா? இந்த கேள்விக்கு பதில், ‘இல்லை’ என்பதே. இரவில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை சேதப்படுத்துகிறது, முடி உதிர்வுக்கு காரணமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இது உங்கள் முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் உடனடியாக வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும்.
இந்த பாதிப்புகளை தவிர்க்க, காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுவதே நல்லது. தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் குளிக்க நேர்ந்தால் அல்லது இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் கூறினால், தலைமுடியை நன்கு உலர்த்திய பின்பே பார்ட்டிக்கோ, படுக்கைக்கோ செல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பாஸ்தா
அந்த அளவுக்கா கொடும பண்றாங்க? – அப்டேட் குமாரு
சாத்தனூர் அணை திறப்பு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
திருவண்ணாமலை தீபம்… இந்த வருடம் 2 ஆயிரம் பேர் மலையேற அனுமதி உண்டா? சேகர்பாபு முக்கிய தகவல்!