பியூட்டி டிப்ஸ்: சன் ஸ்கிரீன்… மீண்டும் மீண்டும் தடவிக்கொள்வது நல்லதா?

Published On:

| By Selvam

சன் ஸ்கிரீன் பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமலிருந்த காலம் மாறி, இன்று பலரும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். சன் ஸ்கிரீன் தவிர்க்க முடியாததாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்வது நல்லதா… எப்போதெல்லாம் தடவிக் கொள்ள வேண்டும் என்கிற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.

‘நம் சருமத்தை சூரியனின் யுவிஏ (UVA)  மற்றும் யுவிபி ( UVB ) கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதுதான் சன் ஸ்கிரீனின் பிரதான வேலையே. சருமத்தில் தடவியதும் அது உள்ளே சென்றுவிடும். சூரியனின் கதிர்களை உள்வாங்கி பிறகு அவற்றின் பாதிப்பு சருமத்தை தாக்காத வகையில் பாதுகாப்பு கொடுக்கும்.

இது சருமத்தில் செயல்படத் தொடங்கவே 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதனால்தான் வெளியே கிளம்புவதற்கு 15- 20 நிமிடங்கள் முன்பே சன் ஸ்கிரீன் தடவிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சன் ஸ்கிரீன் அதிகபட்சம் 2 மணி நேரத்துக்கு பாதுகாப்பு தரும். அலுவலகத்துக்குள் இருக்கிறீர்கள் என்றால், மதிய வேளையில் மீண்டும் ஒருமுறை சன் ஸ்கிரீன் தடவிக் கொள்ளலாம். அதுவே, உங்களுக்கு வெளியே செல்லும் வேலை என்றால் ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கொரு முறையும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

அது மட்டுமே போதாது. தொப்பி, குடை, கண்ணாடி போன்றவையும் அவசியம். இரண்டு மணி நேரத்துக்கொரு முறை உபயோகிக்க முடியாதவர்கள், ஸ்பிரே டைப் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

இந்த நிலையில், விதம்விதமான சன்ஸ்கிரீன் இன்று கிடைக்கிறது. உங்களுக்கானது இதுதான் என்று உணர்ந்துவிட்டால், அதை உபயோகிப்பது உங்களுக்கு செளகர்யமாக இருந்தால் அதையே தொடர்ந்து பின்பற்றுங்கள்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஆனியன் சாதம்

பிக்பாஸ் சீசன் 8 : வெற்றி மேடையில் முத்துக்குமரன் செய்த சம்பவம்!

அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு

சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை:  மகளிர் உரிமைத் தொகை உயர்வு! ஸ்டாலின் mega மாஸ்டர் பிளான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel