தினமும் இரவில் பால் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ‘தினமும் இரவில் பால் குடித்தால் எடை கூடும்’ என்று சிலர் தவிர்க்கிறார்கள். இதில் எது சரி? டயட்டீஷியன்ஸ் சொல்லும் பதில் என்ன?.
“சிலருக்கு பால் பொருட்களைச் சாப்பிட்டாலே ஒவ்வாமை ஏற்படும். சிலருக்கு ஏற்படாது. இந்த நிலையில் இரவில் பால் குடிப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை, பால் குடித்தால் ஏற்றுக்கொள்கிறது என நினைப்பவர்கள் பால் குடிக்கலாம். சிலருக்கு இரவில் வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் குடித்தால்தான் தூக்கம் வரும். அவர்களும் பால் குடிக்கலாம்.
பாலே குடிக்கக்கூடாது… அது எடையை அதிகரிக்கும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றெல்லாம் யார் யாரோ சொல்வதைக் கேட்டு நீங்கள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதுதான் முக்கியம். உங்களுடைய வேலை, உடலுழைப்பு போன்றவற்றைப் பொறுத்து இது முடிவு செய்யப்பட வேண்டும்.
இரவில் வெதுவெதுப்பான பால் எடுத்துக்கொள்வதால் மறுநாள் காலையில் சுலபமாக மலம் கழிக்க முடியும். 100 மில்லி பாலில் 3.4 கிராம் புரதம் இருக்கிறது. இது பாதாம் பால் போன்ற மற்ற பால் வகைகளில் வேறுபடலாம். ஆனால், எல்லாவற்றிலும் சராசரியாக 3 கிராம் புரதச்சத்து இருக்கும். கால்சியமும் இருக்கிறது. தசைகள் மற்றும எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இவை இரண்டும் முக்கியம்.
இரவு உணவை சிலர் சீக்கிரமே முடித்துவிடுவார்கள். அதன்பிறகு தூங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான சூட்டில் சிறிது பால் குடிப்பது நல்லது தான். பாலில் தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து குடிக்கலாம். எந்த உணவுப்பழக்கமும் உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதைப் பொறுத்து பின்பற்றப்பட வேண்டும். பால் விஷயத்திலும் அப்படித்தான்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா?
டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை!
களைகட்டிய சென்னை… நம்ம ஊரு திருவிழாவில் இத்தனை கலை நிகழ்ச்சிகளா?
இது போலீஸ் பொங்கல்… பதக்கம் அறிவித்த ஸ்டாலின்
டங்ஸ்டன் திட்டம்: போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் உறுதி!
ஹெல்த் டிப்ஸ்: காலை உணவை மிஸ் செய்யவே கூடாதாம்… ஏன்?
பியூட்டி டிப்ஸ்: மெலிந்த புருவங்கள்… அடர்த்தியாக வளர இதோ வழி!