பியூட்டி டிப்ஸ்: வறண்ட சருமம் உள்ளவர்கள் வெந்நீரில் குளிப்பது ஆபத்தா?

டிரெண்டிங்

காலநிலை மாற்றம் சருமம் வறட்சி அடைய முக்கிய காரணம் என்றாலும் குளிப்பதற்கு எப்போதும் வெந்நீர் பயன்படுத்துபவர்களுக்கு சருமம் வறட்சி அடைய வாய்ப்புகள் அதிகம்.

சோப்பு போட்டு அடிக்கடி முகத்தைக் கழுவிக்கொண்டே இருந்தாலும், சருமத்தில் உள்ள எண்ணெய் மூலக்கூறுகள் எல்லாம் வெளியேறி சருமம் வறண்டு விடும். மேலும், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தேவையான அளவுக்குச் சுரக்கப்படாதபோதும் சருமம் வறட்சியடையும்.

சிலர் மரபு ரீதியாக வறண்ட சருமத்தைப் பெற்றிருப்பார்கள். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் சிலருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள், சருமம் வறட்சியடைவதைத் தடுக்க வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

அதேபோல், குளிக்கிறேன் என்ற பெயரில் அரைமணி நேரத்துக்கு மேல் தண்ணீரிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது. அதுவும் சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கக்கூடும். குளித்து முடித்த மூன்று நிமிடங்களிலேயே சருமத்தில் மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் தேய்த்துக்கொள்வது நல்லது. இது சருமத்தில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் ஆவியாகாமல் தடுக்கும்.

உங்கள் சருமம் அதிகமாக வறட்சியடைந்திருக்கும் பட்சத்தில் குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் அதற்கு சிறந்த பரிந்துரை. தண்ணீர் நிறைய அருந்துங்கள். சிலர் எண்ணெய் உணவுகளை முழுவதுமாகத் தவிர்ப்பார்கள். இதன் காரணமாகவும் சருமம் வறண்டு போகலாம். உடலுக்கு எண்ணெய்ச் சத்தும் அவசியம் என்பதால் குறைந்த அளவு எண்ணெயை அல்லது நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாறு நிறைந்த பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தலுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு : வைத்திலிங்கம்

காந்திக்கு வந்த சத்திய சோதனை: அப்டேட் குமாரு

”ரொம்ப நாள் கழிச்சு நன்றாக தூங்கினேன்”- மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் உத்தரவு : ராகுல் மீது வழக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *