ஹெல்த் டிப்ஸ்: பகல் நேர உறக்கம்… உடல் எடையை அதிகரிக்குமா?

Published On:

| By christopher

ஒரு நபர், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், அதை குறைவான தூக்கம் என்று சொல்கிறோம். போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது, அது பலவித பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த நிலையில்  பகல் நேர உறக்கம் உடல் எடையை அதிகரிக்குமா? என்கிற சந்தேகம் பலருக்குண்டு. இதற்கான விளக்கம் என்ன?

பகல் நேரத் தூக்கத்தை ஆங்கிலத்தில் ‘பவர் நாப்’ (power nap) என்று சொல்வார்கள். இந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 30 நிமிடங்களைத் தாண்டக்கூடாது.

சிலருக்கு ஷிஃப்ட் மாறி மாறி வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் காரணமாக பகல் வேளையில் சிறிது நேரம் தூங்க வேண்டும் போலத் தோன்றும்.

அதிகாலையில் சீக்கிரமே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கணவரையும் பிள்ளைகளையும் வேலைக்கும் படிக்கவும் அனுப்பும் இல்லத்தரசிகளுக்கு களைப்பின் காரணமாக, மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தேவைப்படும்.

அப்படி சில நிமிடங்கள் தூங்கி எழுந்தால்தான், அன்றைய நாளின் மிச்ச நேரத்தை எனர்ஜியோடு கடக்க முடியும், அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

அந்த வகையில், யாராக இருந்தாலும் மதிய வேளையில் 30 நிமிடங்கள் வரை தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படத் தேவையில்லை.

‘வெறும் அரை மணி நேரத் தூக்கமெல்லாம் ஒரு தூக்கமா… படுத்ததும் 30 நிமிடங்கள் ஆகிவிடுமே’ என்று சொல்வோர் இருக்கிறார்கள். ஆனால், உடல் எடை அதிகரிக்கக்கூடாது என விரும்புவோர், இதைப் பின்பற்றிதான் ஆக வேண்டும்.

30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவோருக்கு உடல் எடை அதிகரிப்பது மட்டுமன்றி, தூங்கி எழுந்திருக்கும்போது மந்தமாக உணர்வது, நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் போன்ற தேடல் அதிகரிப்பது, குறிப்பாக, இனிப்பான, உப்பான உணவுகளின் மீதான தேடல் அதிகரிப்பது போன்றவையும் ஏற்படலாம் என்கின்றன ஆய்வுகள்.

எனவே, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் சற்று இளைப்பாறி, களைப்பையும் போக்க வேண்டும் என நினைத்தால் பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவதைத் தவிர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ஹெல்த்தி உருண்டை

இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு

மோகன்லாலை தாக்கிய ‘விசித்திர ‘மயால்ஜியா… கெட் வெல் லாலேட்டா!

90ஸ் கிட்ஸுக்கு போட்டிக்கு வந்துள்ள ஸ்வீடன் இளைஞர்… தமிழ் பொண்ணுதான் வேணுமாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share