வீட்டில் வளரும் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை தடவலாமா அல்லது கடைகளில் கிடைக்கும் ஜெல்லை பயன்படுத்தலாமா என்பது அழகைப் பராமரிக்க நினைப்பவர்களின் பிரத்யேக கேள்வி… இதற்கான பதில் பதில் என்ன? is best to buy Aloe vera gel from shops?
“கற்றாழை செடியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. அந்த வகையில் அதிலிருந்து பெறப்படும் ஜெல்லை சருமத்துக்கு உபயோகிக்கும்போது அது சிறந்த மாய்ஸ்ச்சரைசராக செயல்படும்.
சருமத்திலும், கூந்தலிலும் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமே அவற்றின் வறட்சிதான். முகப்பரு, சருமத்தில் சுருக்கங்கள், சரும நிற மாற்றம் என பல பிரச்னைகளுக்கும் அற்புதமான மருந் தாகவே தீர்வளிக்கக்கூடியது கற்றாழை ஜெல்.
கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் மாய்ஸ்ச்சரைசர் போல உபயோகித்து வந்தால் முகப்பருக்கள் வராது. பருக்கள் ஏற்படுத்திய தழும்புகளும் மறையும்.
வெயில் காலத்தில் ஏற்படும் வேனல் கட்டிகள், அரிப்பு, சருமத்தில் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கும், அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் கண்களைச் சுற்றி கருவளையம், எரிச்சல், களைப்பு போன்றவை ஏற்படும்.
அவர்களும் தினமும் கற்றாழை ஜெல்லை தடவி வரலாம். கற்றாழையை செடியிலிருந்து பறித்து அப்படியே அரைத்து, நேரடியாக சருமத்திலோ, கூந்தலிலோ பயன்படுத்தக்கூடாது.
கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் நான் கைந்து முறை அலசி, அரைத்துக்கொள்ளவும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த ஜெல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து இரவில் சருமத் தில் தடவிக் கொள்ளலாம். பருக்கள் இருப்பவர்கள், ஜெல்லுடன் வெறும் தண்ணீர் கலந்து தடவலாம்.
முதல் முறை கற்றாழை ஜெல் உபயோகிப்பவர்கள், சிறிது ஜெல்லை காதுக்குப் பின்னால் தடவி, சில நிமிடங்கள் காத்திருந்து, அலர்ஜி எதுவும் இல்லாவிட்டால் உபயோகிக்கலாம்.
சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் இந்த ஜெல்லுடன் வெள்ளரிக்காய் விழுது சேர்த்துப் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லுடன் சிறிது வாசலைன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகளின் வறட்சி, வெடிப்பு, நிற மாற்றம் நீங்கும்.
கூந்தலுக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். வறண்டு, வெடித்த கூந்தல், பொடுகு உள்ளவர்கள், கெமிக்கல் சிகிச்சையால் கூந்தல் பாதிக்கப்பட்ட வர்கள் என எல்லோரும் உபயோகிக்கலாம்.
அரிப்பு, பொடுகு உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லில் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் பேக் போல உபயோகிக்கலாம்.
வறட்சியான கூந்தல் உள்ளவர்கள் இந்த ஜெல்லில் தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்து 45 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசலாம். மாதம் இருமுறை இந்தச் சிகிச்சையைச் செய்யலாம்.
சிலர் இந்த ஜெல்லில் வைட்டமின் இ கேப்ஸ்யூலை உடைத்துச் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். அது தேவையே இல்லை. அதனால் பருக்கள் வரலாம். is best to buy Aloe vera gel from shops?
கடைகளில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லில் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். எனவே வீட்டில் பறித்த கற்றாழை செடியில் இருந்து நாமே அவ்வப்போது ஜெல் தயாரித்துப் பயன்படுத்துவதுதான் சரியானது” என்கிறார்கள் அழகுக்கலை ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: கட்டோரி சாட்!
கிரிக்கெட்ல கூட்டணி ஆப்ஷன் இருந்தா… அப்டேட் குமாரு