சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக `100 Times Washed Ghee’ என்ற ஒன்று டிரெண்டாகி வருவதைப் பார்க்கிறோம். பலரும் வீட்டிலேயேகூட அதைத் தயாரித்துப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். நெய்யில் தயாரிக்கப்படும் இது எல்லாருக்கும் ஏற்றதா? என்ன சொல்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்…
“நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே… அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
சருமநல மருத்துவத்தில் `நான்காமிடோஜெனிக்’ (Noncomedogenic) என்றொரு வார்த்தை உண்டு. அதாவது, நாம் பயன்படுத்துகிற எந்த அழகு சாதனமும் சருமத்தில் எண்ணெய் சுரக்கும் துவாரங்களை அடைக்காதபடி இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் பொருள், அந்தத் துவாரங்களை அடைத்தால், அதில் பாக்டீரியா சேர்ந்து இன்ஃபெக்ஷன் வரக்கூடும்.
அதன் விளைவாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வரக்கூடும். அதாவது, சருமத்தில் பொரிப்பொரியாக வரும். இளம் பருவத்தினருக்கு இயல்பிலேயே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் வளர, வளரத்தான் அவர்களது எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கத் தொடங்கும்.
அதனால்தான் இளம் வயதினருக்கு தேங்காய் எண்ணெய் உட்பட பல எண்ணெய்களையும் குளிப்பதற்கு முன் தடவி, சிறிது நேரத்தில் குளிப்பாட்டச் சொல்லி அறிவுறுத்துவோம். எனவே, சருமத் துவாரங்களை அடைக்காதபடியான மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரு மகன் போனாலும் ஆயிரம் மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் : சைதை துரைசாமி உருக்கம்!
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு