பிரபல ‘விவோ’ நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO நிறுவனம், பட்ஜெட் விலையில் தனது புதிய ‘iQOO Z9 5G’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. iQOO Z9 5G launched India
‘iQOO Z7’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்சனாக அறிமுகமாகியுள்ள ‘iQOO Z9 5G’ ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட்டுடன், ஆண்ட்ராய்டு 14 OS வசதி கொண்டு அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் FHD+ AMOLED திரை, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 1800 நிட்ஸ் ஒளிரும் திறன், 91.90% திரை – உடல் விகிதம், டிடி-ஸ்டார் 2 ப்ளஸ் க்ளாஸ் பாதுகாப்பு போன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, iQOO Z9 5G ஸ்மார்ட்போன் 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிளைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் 2வது கேமரா என 2 கேமராக்கள் உள்ளது.
அதோடு சூப்பர் நைட் மோட், சூப்பர் மூன் மோட் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
முன்புறத்தில், 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, 5,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள iQOO Z9 5G ஸ்மார்ட்போன், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த iQOO Z9 5G ஸ்மார்ட்போன் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.
8GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.19,999 என்ற விலையிலும், 8GB ரேம் + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.21,999 என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் நீலம் என 2 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 13 அன்று மதியம் 12:00 மணிக்கும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 14 அன்றும் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.
ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி ஆகிய கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. iQOO Z9 5G launched India
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Suriya : மீண்டும் ஷூட்டிங் செல்லும் ‘கங்குவா’ படக்குழு?
தேர்தல் பத்திர தீர்ப்பை நிறுத்த வேண்டும் : ஜனாதிபதிக்கு கடிதம்!