IPL: ஆபா்களை வாரி ‘வழங்கி’… வள்ளலாக மாறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

Published On:

| By Manjula

இந்தியன் ப்ரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் (IPL) தொடர் நாளை ( மார்ச் 22) தனது 17-வது சீசனை தொடங்க உள்ளது.

ரசிகர்கள் இந்த ஐபிஎல் சீசனை தங்கு தடையின்றி கண்டு களித்திடும் வகையில் ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை வழங்கியுள்ளன.

இந்த நிறுவனங்கள் அளித்துள்ள அனைத்து ஆஃபர்களும் 2 முதல் 3 மாதங்களுக்கான திட்டங்கள். ஆகவே ஐபிஎல் முடியும் வரை எந்தவித தடையும் இல்லாமல் நீங்கள் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம்.

Rain Update: இந்த மாவட்டங்களுக்கு… இடி, மின்னலுடன் மழையும் உண்டு!

அந்தவகையில் எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஆஃபர்களை அளித்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல்

பிளான் 1 – ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். இதில் தினமும் 3GB 4G டேட்டாவுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். கூடுதலாக இலவச பிரைம் வீடியோ சந்தா மற்றும் 5G அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது.

விஐ

பிளான் 1 – ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 3GB டேட்டாவுடன் 56 நாட்கள் வேலிடிட்டி.

பிளான் 2 – ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 4GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி.

கூடுதலாக மூவீஸ், டிவி மற்றும் வழக்கம்போல இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கும் ஆல் நைட் பின்கே உள்ளது.

Ajith Kumar: ரொம்ப நல்லா இருக்கு… வைரலாகும் பிரியாணி வீடியோ!

ஜியோ

பிளான் 1 – ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம். 100GB டேட்டா 60 நாட்கள் வேலிடிட்டி.

பிளான் 2 – ரூ.667 ப்ரீபெய்ட் திட்டம். 150GB டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டி

பிளான் 3 – ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 3GB டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி.

ஒரு நாள் ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதற்கு 3 முதல் 4GB டேட்டா தேவைப்படும் என்பதால், இந்த திட்டங்கள் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பவித்ரா பலராமன்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ரயில் டிக்கெட் வாங்க கூட காங்கிரசிடம் நிதி இல்லை”: மோடி மீது சோனியா, ராகுல் புகார்!

விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல்: பிரேமலதா உருக்கம்!

தீவிரமடையும் குட்கா வழக்குகள்..அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குக் குறிவைத்த சிபிஐ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel