இந்தியாவில் ‘ஐபோன் 16’ சேல்ஸ்… ஷோரூம்களில் அலைமோதிய கூட்டம்!

Published On:

| By Selvam

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 20) முதல் ஐபோன் 16 விற்பனை துவங்கியுள்ள நிலையில், ஷோரூம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மொபைல் வாங்கி செல்கின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தியது.

அதாவது,  ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல் ஐபோன்கள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

விலை நிலவரம்:

ஐபோன் 16

128 ஜிபி – ரூ.79,000, 256 ஜிபி – ரூ.89,900, 512 ஜிபி – ரூ.1,09,900

ஐபோன் 16 ப்ளஸ்

128ஜிபி – ரூ.89,900, 256 ஜிபி – ரூ.99,900, 512 ஜிபி – ரூ.1,11,900

ஐபோன் 16 ப்ரோ

128ஜிபி – ரூ.1,19,900, 256 ஜிபி – ரூ 1,29,900, 512 ஜிபி – ரூ 1,49,900, 1 டிபி – ரூ.1,69,900

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்

256 ஜிபி – ரூ.1,44,900, 512 ஜிபி – ரூ 1,64,900, 1 டிபி – ரூ. 1,84,900

புதிய கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடல்களில் கேமரா கண்ட்ரோல் பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விசுவல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், டெல்லி, மும்பை நகரங்களில் ஐபோன் ஷோரூம் முன்பாக இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஐபோன் பிரியர்கள் காத்திருந்து ஐபோனை வாங்கி சென்றனர்.

மும்பை ஷோரூமில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்கிய அக்‌ஷய் கூறும்போது, “சூரத்திலிருந்து காலை 6 மணிக்கு மும்பைக்கு வந்தேன். iOS 18 ஐ விரும்பியதால், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கியுள்ளேன். ஜூம் கேமராவின் தரம் சிறப்பாக உள்ளது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே”… ஜான் மார்ஷலை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

‘ஜீரோ பிரசவ மரணம்’… விருதுநகர் மாவட்டம் சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share