ஐபோன் மோகம் யாரையும் விட்டு வைக்காத இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வெளியாகும் ஐபோனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.
இந்த வருடமும் செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 வரிசை போன்களை அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த ஐபோன்களுக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கிவிட்டது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனை தொடங்கியுள்ளது.
ஐபோன் என்றாலே கடை வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள், இந்த விற்பனை நிலையங்களில் இன்று அதிகாலை 3 மணி முதலே குவியத் தொடங்கினர்.
#WATCH | #Apple's iPhone 15 series to go on sale in India from today. Visuals from the country’s second Apple Store at #Delhi's Select Citywalk Mall in Saket. #Iphone15
— Ratnesh Mishra 🇮🇳 (@Ratnesh_speaks) September 22, 2023
வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஐபோன் என்றாலே ஐலேண்ட் கட்அவுட் தான், இந்த மாடல்களிலும் இடம்பெற தவறவில்லை. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்பும், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உயர்தர ஏ17 ப்ரோ சிப்பும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கசிந்திருந்த தகவலின் படி யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் இதில் இடம்பெற்றள்ளது.
ஐபோன் 15 மாடல்களின் திரை அளவு:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ – 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே.
ஐபோன் 15 ப்ளஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் – 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே.
இந்த நான்கு ஐபோன் 15 மாடல்களிலும் தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட் பொருத்தப்பட்டுள்ளது.
விலை விபரங்கள்:
ஐபோன் 15:
128GB ஸ்டோரேஜ் – ரூ.79,900
256GB ஸ்டோரேஜ் – ரூ.89,900
512 GB ஸ்டோரேஜ் – ரூ.1,09,900
ஐபோன் 15 ப்ளஸ்:
128GB ஸ்டோரேஜ் – ரூ.89,900
256GB ஸ்டோரேஜ் – ரூ.99,900
512 GB ஸ்டோரேஜ் – ரூ.1,99,900
ஐபோன் 15 ப்ரோ:
128GB ஸ்டோரேஜ் – ரூ.1,34,900
256GB ஸ்டோரேஜ் – ரூ.1,44,900
512 GB ஸ்டோரேஜ் – ரூ.1,64,900
1TB GB ஸ்டோரேஜ் – ரூ.1.84,900
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்:
256GB ஸ்டோரேஜ் – ரூ.1,59,900
512 GB ஸ்டோரேஜ் – ரூ.1,79,900
1TB GB ஸ்டோரேஜ் – ரூ.1.99,900
தள்ளுபடி அறிவிப்புகள்!
புதிய ஐபோன் 15 மாடல் போன்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடங்களில் வெளியான ஐபோன்களை வாங்குவதற்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய ஐபோன்களை நல்ல தரத்தில் கொடுத்தால் புதிய ஐபோன் 15ஐ ரூ.55,700 வரை தள்ளுபடியில் பெற முடியும்.
ஐபோன் எஸ்இ, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன்14 ப்ளஸ் மாடல்களுக்கு ரூ.2000 முதல் ரூ.4000 வரை தள்ளுபடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ளஸ் மாடல்களுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக்கும், எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்களை வாங்கினால் ரூ.6000 வரை தள்ளுபடி பெற முடியும்.
– பவித்ரா பலராமன்
பெரியார் – மணியம்மை குறித்து பேச்சு: துரைமுருகன் வருத்தம்!
மக்களவை தேர்தல் ஆலோசனை கூட்டம் : கமல் பேசியது என்ன?