செப்டம்பர் மாதம் என்றால் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதூர்த்தி என்று பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களுக்காக காத்திருக்கும் மக்கள் ஒரு புறம் இருக்க, மற்றுமொருபுறம் ஒரு பெருங்கூட்டமே காத்திருப்பது வெளியாகும் ஆப்பிள் ஐபோன் மாடலுக்காக.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஆப்பிள் இயர்போன், ஆப்பிள் வாட்ச்,
ஐபாட், மேக் ஓஎஸ், ஏர்டேக், ஐஓஎஸ், ஆப்பிள் டிவி என பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டாலும்,
அதில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஆப்பிள் ஐபோன்களே.
2007ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை வெளியிட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை ஐபோன் மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முதன்முதலாய் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் மாடல், ஐபோன்1. இது 4gb ரேம் மற்றும் ப்ராசசர் APL009 கொண்டது.
அங்கு தொடங்கிய ஐபோனின் பயணம் இன்று 512GB, 1TB ரேம், ஆப்பிள் A16 ப்ராசசர் என நீண்டு கொண்டே போகிறது.
அடுத்து வர போகும் ஐபோன் 15, A17 ப்ராசசர் கொண்டதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான 14 வரிசை ஐபோன்கள் ios 16 வரை ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளதால், இனி வெளியாகும் மாடல் ios 17 உடன் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் எழுந்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஐபோன் 15 வெளியாகும் என 9to5mac இணையதளத்தில் வெளியான தகவலால் ஐபோன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை வெளியான ஐபோன்களின் ஆரம்ப ரேம் 128GBல் இருந்து தொடங்கும்,
ஆனால் இந்த முறை 256GB ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்படி ரேம் இல் மாற்றம் இருந்தால் முந்தைய ஐபோன்களை விட விலை கூடுதலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் பயனாளர்களின் நீண்டநாள் எதிப்பார்ப்பான USB C போர்ட் வசதியும் ப்ரோ மாடல்களில் periscope zoom மற்றும் 6X zoom லென்ஸ் என தரம் உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் ப்ரோ மாடல்கள் டைடானியம் ஃப்ரேம் மற்றும் ஐபோன் 14ஐ விட எடையில் குறைந்த அளவிலும், மேலும் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்ற செய்தி வெளியீட்டால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
ஐபோன் 15 வெளியாவதினால் மகிழ்ச்சி என்றாலும், விலை அதிகரிக்குமா? எதிர்பார்த்த அம்சங்கள் இடம் பெறுமா? என்ற குழப்பமான மனநிலையே நிலவுகிறது.
பவித்ரா
”அண்ணாமலை கருத்து குறித்து கவலை இல்லை”- செல்லூர் ராஜு
செந்தில் பாலாஜி வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!