ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 16 ஸ்மார்ட்போன் ரூ.79,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகி, ஐபோன் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1TB வேர்சனின் விலை, யாரும் எதிர்பார்க்காத அளவாக ரூ.1,84,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16-ஐ போலவே,ஐபோன் 16 ப்ரோவிலும் புதிய கேமரா கன்ட்ரோல் பட்டன் இடம்பெற்றுள்ளது.இந்த ஐபோனில் விசுவல் இன்டெலிஜென்ஸ், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய ஆடியோ மிக்ஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4k 120fps தரத்தில் வீடியோ எடுக்கலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?
ஐபோன் 16 ப்ரோவின் 128GB வகைரூ.1,19,900 என்ற விலைக்கும், 256GB வகை ரூ.1,29,900 என்ற விலைக்கும், 512GB வகை ரூ.1,49,900 என்ற விலைக்கும், 1TB வகை ரூ.1,69,900 விற்பனை செய்யப்பட உள்ளது
அதேபோல, 256GB கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வகை ரூ.1,44,900 என்ற விலைக்கும், 512GB வகை ரூ.1,64,900 என்ற விலைக்கும், 1TB வகை ரூ.1,84,900 என்ற விலைக்கும் விற்பனையாக உள்ளது.
இந்த ஐபோன்கள் பிளாக் டைட்டானியம், வைட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம் என 4 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
ஐபோன் 16-ஐ போலவே, இந்த ஐபோன்களுக்கும் செப்டம்பர் 13 அன்று மாலை 5:30 மணிக்கு முன்பதிவு துவங்கவுள்ளது. விற்பனை செப்டம்பர் 20 அன்று துவங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களை ஆக்சிஸ் அல்லது ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி பெறும்போது, ரூ.5,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் என்ன?
ஐபோன் 16 ப்ரோ 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR திரையை கொண்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9-இன்ச் சூப்பர் ரெடினா XDR திரையை கொண்டுள்ளது. 1 நிட்ஸ் முதல் 2,000 நிட்ஸ் வரை ஒளிரும் திறன், 120Hz திரை புதுப்பிப்பு விகிதம் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த ஐபோன்களில் புதிய தலைமுறை ஏ18 ப்ரோ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐபோன்கள் iOS18 இயக்க முறைமையை (OS) அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் என ஐபோன்களிலும் பின்புறத்தில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன – 48MP பியூசின் காமெரா, 48MP அல்ட்ராவைட் கேமரா, 12MP 5x டெலிபோட்டோ கேமரா. 48MP பியூசின் காமெரா மூலம் 48MP தரத்தில் மேக்ரோ போட்டோகளை எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த ஐபோன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஐபோன்கள் 120fps வரை 4k தரதத்தில் வீடியோ எடுக்கும் திறனை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நைட் மோட் டைம்-லேப்ஸ் வசதியும் இந்த ஐபோன்களில் இடம்பெற்றுள்ளன.
ட்ரூ டோன் பிளாஷ், ஸ்மார்ட் HDR 5, ஆட்டோ இமேஜ் ஸ்டேபிளைசேஷன் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த ஐபோன்கள் கொண்டுள்ளது.
இந்த ஐபோன்களில் செல்ஃபிகளுக்காக முன்புறத்தில் 12MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
2 நானோ சிம் வசதியுடன், டைப்-சி சார்ஜிங், 5ஜி, வை-பை 7, ப்ளூடூத் 5.7 உள்ளிட்ட வசதிகள் இந்த ஐபோன்களில் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் 16 ப்ரோ 27 மணி நேர வீடியோ பிளேபேக், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 33 மணி நேர வீடியோ பிளேபேக் திறனை கொண்டுள்ளது. மேலும், 30 நிமிடங்களில் 50% சார்ஜ் ஏறும் பாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், 25W வரை வயர்லெஸ் சார்ஜிங் திறனையும் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
புதிய வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 16, 16 பிளஸ்: விலை என்ன?
திருச்சியில் தொழிற்சாலை : ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!