உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் (முன்பு ட்விட்டர்), வாட்ஸ்அப் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில், தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023-ல் 20 சதவிகிதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டாக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ரீல்ஸ்அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக்கை மிஞ்சும் வகையில் அதிகமாக வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு மேலாளர் ஆபிரகாம் யூசெப் கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தூத்துக்குடி தக்காளி ஜாம்
கேரளா வெற்றி கழகமா? : அப்டேட் குமாரு