இன்ஸ்டாகிராம் செயலி நேற்று இரவு முடங்கியதால் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் தினசரி இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகளவில் 1.386 பில்லியன் பயனர்களும், இந்தியாவில் 229.55 மில்லியன் பயனர்களும் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 8) இரவு உலகளவில் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி வேலை செய்யவில்லை. சமூக வலைதளங்கள் செயலிழப்பின் கண்காணிப்பு தளமான டவுண்டெக்டர்.காம்-படி 46,000 பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் முடங்கியிருக்கிறது.
இதில் குறிப்பாக, யுனைடட் ஸ்டேட்ஸில் அதிகப்படியான பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் முடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சில பயனர்கள் இன்ஸ்டாகிராம் இயங்கவில்லை என புகார் அளித்தனர்.
இதில், 53 சதவீதம் சர்வர் இணைப்பு, 33 சதவீதம் செயலி பிரச்சனை மற்றும் 14 சதவீதம் உள்நுழைவதில் (லாக் இன்) பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று டவுண்டெக்டர் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலிழந்ததால் ட்விட்டரில் #instagramdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஆனால் இதுவரை மெட்டா நிறுவனம் இந்த புகார்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!