உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Compare the market என்ற காப்பீட்டு நிறுவனம் சமீபத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில் ஓட்டுநர்கள் பெற்றுள்ள சாலை விழிப்புணர்வு, வாகனங்களின் வேக வரம்பு, சாலைகளின் நிலை மற்றும் ஓட்டுநர்களின் குடிபழக்கம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டன.
அதன் முடிவில் உலகிலுள்ள 50 நாடுகளுக்கு இடையேயான சிறந்த மற்றும் மோசமான ஓட்டுனர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டது.
அதன்படி உலகிலேயே மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2.34 புள்ளிகளுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் உலகின் சிறந்த ஓட்டுநர்களை கொண்ட நாடுகளில் 4.57 புள்ளிகளைப் பெற்று ஜப்பான் முதலிடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து, நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன
தரவரிசையில் உலகின் மோசமான ஓட்டுநர்கள் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பெரு, லெபனான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பெற்றுள்ளன.
சமீபத்தில், புவிஇருப்பிட தொழில்நுட்ப நிபுணரான டாம்டாம் என்பவர்
வாகனம் ஓட்டுவதற்கு நெரிசல் மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள 416 நகரங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் வாகனம் ஓட்டுவதற்கு நெரிசல் மிகுந்த நகரங்களில் இந்தியாவின் பெங்களூரு 2ம் இடம் பிடித்தது.
நெரிசல் நேரத்தில் வெறும் 10 கிலோமீட்டர்களை கடக்க சராசரியாக பெங்களூருவில் 29 நிமிடம் ஆவதாக குறிப்பிடப்பட்டது.
முதலிடத்தில் லண்டன் நகரம் உள்ளது. அங்கு 10 கிமீ தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் ஆகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
100 மோடி வந்தாலும் 2024ல் வாய்ப்பில்லை : மல்லிகார்ஜுன கார்கே
திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!