இந்தியா-பாரத் சிறப்புப் பட்டிமன்றம்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

India bharat Special Panel

ஸ்நாக்ஸ் சாப்பிட பக்கத்துல இருக்கற பேக்கரிக்கு போனேன். அங்கயும் இந்தியா, பாரத் பஞ்சாயத்துதான். என்கிட்ட கேட்டாப்ல பேக்கரி ஓனர்… ‘வர்ற விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு சன் டிவியோ, விஜய் டிவியோ சிறப்புப் பட்டிமன்றம் ஏற்பாடு பண்ணி நம் நாட்டுக்கு பெயர் இந்தியாவா, பாரத் தா அப்படினு தலைப்பு வச்சி பேசச் சொல்லி ஒரு ஒன்றரை மணி நேரம் கொழுக்கட்டை தின்னுக்கிட்டே பாக்கலாம். இதுக்கும் சாலமன் பாப்பையா நடுவரா இருக்க மறுக்காம இருக்கணும். இதைத் தவிர வேறு எந்த பிரயோசனமும் இல்ல’னு சொல்லிட்டு கேக்கை தின்னுட்டு வந்துட்டேன்.
நீங்க அப்டேட்டை பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
பாரத் ” ன்னு மாத்திட்டு , அந்த 15 லட்சத்தை bank ல போட்டால்
சந்தோசம்…ஜி
#பண்டிகைகள் வரிசையா வருது…!!


கடைநிலை ஊழியன்
வீட்டுக்கு கிளம்பிட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன்..
டிராபிக் – போயிருவியா.. என்ன மீறி அரைமணி நேரத்துல போயிருவியா..


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
In foreign countries:
உன் விசா முடிஞ்சு போச்சே இன்னும் ஏன் உங்க நாட்டுக்கு திரும்பி போகாம இங்கயே சுத்திட்டு இருக்க?
விளையாடாதீங்கன்னே பாஸ்போர்ட்ல இந்தியான்னு பிரிண்ட் ஆகிருக்கு அப்படி ஒரு நாட்டுக்கு எந்த பிளைட்டும் போறதில்லையாம்.. நிதம் ஏர்போர்ட் வந்து வந்து போயிட்டு இருக்கேன்


நெல்லை அண்ணாச்சி
அயோத்தி் சாமியார் தலைக்கு 100 கோடி..சீமான்
#தம்பிக்கு ஒண்ணுன்னா… அண்ணனால தாங்க முடியுமா..!?


balebalu
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
நாட்டோட பெயரையே மாத்த போறாங்க
உப்புமாவை கிச்சடி ன்னு சொன்னா என்ன தப்பு ன்னு கேக்குறாம்ப்பா.


ஷிபின் Shibin
எல்லாருக்கும் சம வாய்ப்பு அளிப்பதே திராவிடம் – உதயநிதி
சரி திமுக கட்சியை எவ்ளோ நாளா உங்க கண்ட்ரோல்ல வச்சிருக்கீங்க ?

நாகராஜா சோழன் MA MLA
சாலையில் சிதறி கிடக்கும் உணவு பொட்டலத்தில் வீசுகிறது
யாரோ ஒருவரின் பசியின் வாசம் !

India bharat Special Panel

mohanram.ko
அயோத்தி சாமியார் தலைக்கு ரூ.100 கோடி – சீமான்
தம்பிஸ்-புரிஞ்சிடிச்சி, நன்கொடை வசூல் பண்ணிடறோம்

India bharat Special Panel
ℳsd ❝இதயவன்❞

இந்தியாவை இனி ‘பாரத்’ என அழைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
நீங்க சொல்லிட்டிங்க ல்ல அப்ப இந்தியா னு தான் அழைப்பாங்க?!

India bharat Special Panel

லாக் ஆஃப்

அடுத்தடுத்து மாநாடுகள்: கொங்குவில் குவியும் திமுக கவனம்!

அமைச்சர் உதயநிதி ஒரு ஈசல் : மன்னார்குடி ஜீயர்!