கேரளாவில் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழ சென்ற இளைஞரை அப்பேருந்தின் நடத்துநர் நொடிப் பொழுதில் காப்பாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அரசு பேருந்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தினார். மருத்துவமனை வாயிலில் பேருந்தில் வைத்தே அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அப்பேருந்துகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று கேரளாவில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தனியார் பேருந்து ஒன்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் உள்ளே செல்லாமல் பேருந்து படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணச்சீட்டை வாங்கி கொண்டிருந்தார்.
நடத்துநருக்கு அருகில் அந்த இளைஞரும், மற்றொரு பயணியும் நின்றிருந்தனர். திடீரென அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழ இருந்தபோது, நொடிப் பொழுதில் நடத்துநர், இளைஞரின் கைகளை பற்றி காப்பாற்றினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவேகமாக பரவி அனைவரிடமும் பாராட்டினை பெற்று வருகிறது. இளைஞரை காப்பாற்றிய நடத்துனரை “ஸ்பைடர் மேன்” என்றும், “மின்னல் முரளி” என்றும், “சூப்பர் மேன்” என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பதவி காலம் முழுவதும் ஆதரவளிப்போம்: நிதிஷ்குமார் உறுதி!
சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”… போஸ்டரை வெளியிட்ட முன்னணி பிரபலங்கள்..!