ஹெல்த் டிப்ஸ்: பல் வலியைத் தடுக்க உடனடி வைத்தியம்!

டிரெண்டிங்

வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலி ஏற்படாதவர்கள் இருக்க முடியாது. சொத்தை, ஈறு பிரச்சினை, புதிய பல் வளர்வது, பற்களின் அமைப்பு சீராக இல்லாதது, மெல்லும்போது ஏதாவது குத்திவிட்டால் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பல் வலி ஏற்படலாம்.

பல் சொத்தை மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், தீவிர நோய்த்தொற்று ஆகிய இரண்டு காரணங்களால் அதிகமான, தாங்க முடியாத பல் வலி ஏற்படலாம்.

இந்த நிலையில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிக்கலாம். கிருமித் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை உப்பில் இருக்கிறது. இது அழற்சியைத் தடுக்கும். வாயில் ஏதேனும் புண்கள் இருந்தாலும் அது ஆற்றிவிடும்

பல் வலிக்கு ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதும் நிவாரணம் தரும். ஒரு பிளாஸ்டிக் கவரில் ஐஸ்கட்டியைப் போட்டு, தண்ணீரில் வெளியேறாதபடி மூடி விடவும். பின்னர், வலி உள்ள பக்கம் இதை வைத்து ஒற்றி எடுக்கவும்.

இது, அப்பகுதியில் உணர்வு குறைந்து வலியை மறக்கச் செய்யும்.

தூங்கும்போது உங்கள் தலை உயர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். உதாரணத்துக்கு தலையணையை சாய்வாக வைத்துக்கொண்டு, அதன் மீது உறங்கலாம்.

இதனால், தலைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும் நிலையில், அதன் எதிரொலியாக வலி கட்டுப்படும்

சாதாரணமாகவே பற்களில் இலவங்கத்தை கடித்து, மென்று அப்படியே வாய் கொப்பளிப்பது கிருமிகளில் இருந்து விடுதலை அளிக்கும்.

அந்த வகையில், காட்டன் அல்லது மென்மையான துணியை உருண்டை போல உருட்டி, அதன் மீது ஒன்றிரண்டு சொட்டு இலவங்க எண்ணெய் விட்டு வாயில் கடித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியில் இதே சிகிச்சையை தொடர்ந்தால் பல் வலி குறையும்.

வலி இருக்கும் இடத்தை நாக்கு வைத்தோ, கை வைத்தோ தீண்டக்கூடாது. கிராம்பை பல்லில் வைப்பதால்கூட சிலருக்கு வலி குறையும்.

ஆனால், இவையெல்லாம் தற்காலிகமான தீர்வுகள்தான். இவற்றால் பல் வலியை குறுகிய காலத்துக்குத் தள்ளிப்போடலாமே தவிர, தீர்க்க முடியாது.

பல் வலி அல்லது நோய்த்தொற்றுக்கான காரணத்தைக் கண்டறிந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். எவ்வளவு சீக்கிரம் முடியமோ, அவ்வளவு சீக்கிரம் பல் மருத்துவரை அணுகி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாரு

ஹெல்த் டிப்ஸ்: தினமும் சிறிது ரெட் ஒயின் குடிப்பது ஆரோக்கியமானதா?

பியூட்டி டிப்ஸ்: கோடையில் ஏற்படும் அரிப்பு… விரட்டுவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *