இக்கால இளைஞர்களின் கனவு கார்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஹூண்டாய். அதிலும் ஹூண்டாய் i20 மாடல் கார்களுக்கென தனி மவுசு உண்டு. பாதுகாப்பு வசதி, புதுமையான தோற்றம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு நிறங்கள் என அனைத்திலும் அட்டகாசமாக இருப்பது தான் இந்த ஹூண்டாய் i20 மாடல் கார்.
இந்த மாடல் காரின் சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற ப்ராண்ட் கார்களில் ஒரு குறிப்பிட்ட வேரியண்டிற்கு மேல் வாங்கினால் மட்டுமே 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சம் கிடைக்கும்.
ஆனால் ஹூண்டாய் i20 மாடலை பெருத்தவரை இதன் குறைந்தபட்ச வேரியண்ட் ஆன எரா முதல் அதிகபட்ச வேரியண்ட் ஆன ஐவிடி ஆஸ்டா (o) டூயல் டோன் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை வழங்கியுள்ளது ஹூண்டாய்.
ஹூண்டாய் i20 மாடல் கார்களின் விலையானது குறைந்தபட்ச வேரியண்ட் ஆன எரா ஏழு லட்சத்து நான்காயிரத்து நானூறு முதல் துவங்கி அதிகபட்ச வேரியண்ட் ஆன ஐவிடி ஆஸ்டா (o) டூயல் டோன் பதினோரு லட்சத்து இருபதாயிரத்து தொள்ளாயிரம் வரை எக்ஸ் ஷோரூம் விலையாக உள்ளது.
ஐந்து பேர் வசதியாக பயணிக்கக்கூடிய இந்த மாடல் காரில் 26 ஸ்டண்டர்டு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் என்ஜின் 1.2 கப்பா வகை ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் இன்டலிஜன்ட் வேரியபில் ட்ரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.
i20 மாடல் கார்கள் பெட்ரோலில் இயங்கக்கூடியவை. இதன் முழு டேங்க் கொள்ளளவு 37 லிட்டர் ஆகும். ட்டியூப்லெஸ் டயர்வகை கொண்டது. இந்த வாகனத்தின் மொத்த நீளம் 3995மிமீ, மொத்த அகலம் 1775மிமீ, உயரம் 1505 மிமீ மற்றும் 2580 மிமீ வீல்பேஸ் அமையப்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-பவித்ரா பலராமன்
உக்ரைன் – ரஷ்யா போர் : ’டூப்’ ராணுவ வீரர்களாக சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!