ரசிகரின் காலில் விழுந்த ரித்திக் ரோஷன்

Published On:

| By srinivasan

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராகவும், தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாகவும் வலம் வருபவர் ரித்திக் ரோஷன்..

பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரித்திக் ரோஷன் தற்போது தமிழில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.

Hrithik Roshan touching

இந்த படம் நாளை மறுநாள் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ரித்திக் ரோஷனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று சனிக்கிழமை மும்பையில் உடற்பயிற்சி விழிப்புணர்வு  சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹிரித்திக் ரோஷன் அங்கு திரண்டிருந்த மக்களிடமும் அவரது ரசிகர்களிடமும் உரையாடினார்.

https://twitter.com/HRxfan_boy/status/1563491556451323905?s=20&t=zjl3m5u1ooVKPiq3TXbECQ

அப்போது மேடைக்கு புகைப்படம் எடுக்க வந்த அவரது ரசிகர் ரித்திக் ரோஷனின் காலை தொட்டு வணங்கவே அவரும் திடீரென ரசிகரின் காலைத் தொட்டு வணங்கி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

  • க.சீனிவாசன்

ஆண்ட்ரியாவின் அந்தக் காட்சிகள்: மனம் திறந்த மிஷ்கின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share