முகம் மற்றும் வெளிப்புற தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடலில் உள்ள உள் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
உதாரணத்துக்கு அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள் பகுதிகளில் கருமை காணப்படும்.
அதுவும் உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களில் அதிகமாக கருமை படர்ந்திருக்கும்.
இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம்.
இதற்கு செயற்கை முறையில் நாம் பல க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது சில நாட்கள் மட்டுமே பலன் கொடுக்கும். நிரந்தரமான தீர்வு என்பது இல்லாமலே போய்விடும்.
இந்த கருமையை வீட்டிலேயே எளிய முறையில் விரட்டலாம். எப்படி?
பச்சை பயறை நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்ந்து கருமையாக உள்ள பகுதிகளில் தேய்த்து வர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் கருமை நீங்குவதுடன் நிரந்தர தீர்வு காணலாம்.
கற்றாழையை தோல்களை நீக்கிவிட்டு அதன் ஜெல் பகுதியை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். தினமும் இரவு நேரங்களில் அக்குள், கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் தேய்த்து வர 15 நாட்களில் நல்ல மாற்றம் உங்களுக்கு தெரியும்.
தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து தேய்த்து வர ஒரு சில வாரங்களில் கருமை நீங்குவதை உங்களால் உணர முடியும்.
உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சாற்றை எடுத்து தொடையின் கருமையான பகுதிகளில் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்த்து 30 நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் கழுவி வர மறைவு பகுதிகளில் படர்ந்திருக்கும் கருமை விரைவில் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: பொரித்த மீன் பிரியரா நீங்கள்… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
கொஞ்சம் ரிலாக்ஸ்… ஏடிஎம்ல ஏசி காத்து: அப்டேட் குமாரு