குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பனீரில் தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், இனிப்பு வகைகள் என பல வகையான ரெசிப்பிகளை உருவாக்க முடியும்.
அப்படிப்பட்ட பனீரை வீட்டிலேயே தயாரிக்க… ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, சில துளிகள் எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் சேர்த்து மெதுவாகக் கிளற வேண்டும்.
அப்போது பால் திரியத் தொடங்கும். வேகமாகக் கிளறக் கூடாது. அப்படிக் கிளறினால், திரண்டு வரும் பனீர் உடைந்துவிடும்.
அதேபோல, எலுமிச்சைச்சாறு அதிகமாகிவிட்டால் பனீரில் புளிப்புச் சுவை இறங்கிவிடும். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.
பாலில் இருக்கும் தண்ணீர் தனியாகப் பிரிந்து பனீர் திரண்டு வந்த உடன், சுத்தமான காட்டன் துணியில் ஊற்றி வடிகட்ட வேண்டும். தண்ணீர் முழுவதும் வெளியேறும் வகையில் துணியை இறுக்கமாகக் கட்டி, அதன் மேல் கனமான பொருளை வைத்துவிட வேண்டும்.
ஒன்றிரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தேவையான வடிவத்தில், அளவில் துண்டு போட்டு வைத்துக்கொள்ளலாம்.
வீட்டிலேயே தயாரிக்க முடியாதவர்கள் பனீரை கடைகளில் வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும்.
வழுவழுப்புத் தன்மை இருந்தாலோ, கவரை பிரித்ததும் புளிப்பு வாடை அடித்தாலோ, பனீரை நறுக்கும்போது கறுப்பு நிறப் புள்ளிகள் தென்பட்டாலோ தரமில்லாத, பழைய பனீர். அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் தயாரித்தாலும், கடைகளில் வாங்கி வந்தாலும் ஒரு நாளுக்கு மேல் அதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
பனீரை சமைப்பதற்காக ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துவிட்டு நீண்ட நேரம் வைத்திருந்தால் கடினமாகிவிடும், புளிப்புத்தன்மையும் ஏறிவிடும். இதைத் தவிர்ப்பதற்கு பனீரை தண்ணீரில் போட்டு வைக்கலாம்.
அடுத்த நாள் சமைப்பதற்கு என்றாலும் தண்ணீரை மட்டும் மாற்றிவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இப்படி ஃப்ரிட்ஜில் சேமிப்பதையும் ஒரு நாளைக்கு மேல் வைக்கக்கூடாது.
பனீரை ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஃப்ரீஸரில் வைக்கும்போது பனீர் கடினமாகிவிடும். சமையலில் அதைச் சேர்த்தாலும் உடைந்து போவதற்கு வாய்ப்புள்ளது.
பாலில் இருந்து உருவாகும் பனீர் ஏற்கெனவே வெந்ததுதான். எனவே, சமையலுக்குப் பயன்படுத்தும்போது நீண்ட நேரம் சமைக்காமல், நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் சமைத்தால் போதுமானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!
இளையராஜா இசைநிகழ்ச்சி : சென்னை மெட்ரோ சிறப்பு சலுகை!
அமலுக்கு வந்த புதிய மதுவிலக்குத் திருத்தச் சட்டம் : என்னென்ன தண்டனைகள்?