சருமத்தில் இருக்கும் மேக்கப்பையும், அழுக்குகளையும் எளிதாக அகற்ற உதவுவது தான் மைசெல்லார் வாட்டர். இதை `Water with Micelles’ என்றும் சொல்லலாம். அதாவது தண்ணீருடன் மிக நுண்ணிய எண்ணெய் மூலக்கூறுகள் (Oil molecules) இதில் கலந்திருக்கும்.
கண் மை, லிப்ஸ்டிக் போன்றவையெல்லாம் வெறும் தண்ணீர் வைத்து தேய்த்தால் போகாது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துத் தேய்க்கும்போது உராய்வு ஏற்பட்டு சருமமும் சேதமடையும்.
தென்னிந்தியர்கள் பொதுவாகவே சற்று கருமையான நிறம் கொண்டவர்களாக இருக்கிறோம். ஏனெனில், சருமத்துக்குக் கருமை நிறம் கொடுக்கிற மெலனின் என்கிற நிறமி தென்னிந்தியர்களின் சருமத்தில் அதிகம் இருக்கும்.
இந்தச் சூழலில் அதிகம் உராய்வைச் சந்திக்கும் சருமம், மேலும் கறுப்பாகலாம் அல்லது கருமையான திட்டுகள் உருவாகலாம்.
இப்படி சிரமம் இல்லாமல் சருமத்தை சேதப்படுத்தாமல் மேக்கப், அழுக்கை அகற்றுவதற்கு மைசெல்லார் வாட்டர் பயன்படும். சருமத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படாது.
மைசெல்லார் வாட்டரை பார்க்கும்போதே மேலே எண்ணெய் போல மிதக்கும். கீழே தண்ணீர் தெரியும். குட்டி குட்டியான எண்ணெய்த் துளிகள் தண்ணீருடன் கலந்திருக்கும். அதனால் நன்றாகக் குலுக்கிய பிறகுதான் உபயோகிக்க வேண்டும்.
தினமும் மேக்கப் போடுகிறேன் என்று நீங்கள் சொல்கிறபட்சத்தில் தினமும் மைசெல்லார் வாட்டர் பயன்படுத்தலாம்.
ஹெவி மேக்கப்பாக இருந்தால் மைசெல்லார் வாட்டரை ஒரு காட்டன் பேடில் நனைத்து முகத்தில் தடவிய பிறகு 2 நிமிடங்கள் வரை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் மேக்கப்பை கலைக்க எளிதாக இருக்கும். அதன்பிறகு துடைத்துக் கொள்ளலாம்.
மைசெல்லார் வாட்டர் இப்போது பார்மசிக்களிலேயே கிடைக்கிறது. அழகு சாதனப்பொருள்கள் விற்கும் இடங்களிலும், ஆன்லைனிலும் வாங்கலாம்.
சன் ஸ்க்ரீன் வாங்கும்போது அதில் எஸ்பிஎஃப் (SPF) எல்லாம் கவனிப்போம். மைசெல்லார் வாட்டரில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை’’ என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு
சவுக்கு சங்கர் மீதான 2ஆவது குண்டர் சட்டம் ரத்து!
தப்பான பிசினஸ்… தவறான தொடர்பு… தமிழரின் உயிரை எடுத்த கேரள கும்பல்!
மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… எத்தனை நாட்கள் தெரியுமா?