பியூட்டி டிப்ஸ்: டார்க் கலர் நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க? ஒரு நிமிஷம்!

Published On:

| By Selvam

இன்றைக்கு நிறைய பெண்கள் டார்க் நெயில் பாலிஷ்தான் போட விரும்புகிறார்கள். பிளாக், டார்க் ப்ளூ, டார்க் மெருன் போன்ற அடர் நிற நெயில் பாலிஷ்களில் கெமிக்கல் அதிகம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். லைட் கலர்களில் கெமிக்கல்ஸ் குறைவு.

சில நேரங்களில் டார்க் கலர் நெயில் பாலிஷை நகத்தில் இருந்து ரிமூவ் செய்த பிறகு நகத்தின் நிறமே நெயில் பாலிஷ் நிறத்துக்கு மாறியிருக்கும். இதற்குக் காரணம், அது மட்டரகமான பாலிஷ் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

டார்க் கலர் நெயில் பாலிஷ்களுக்கு நகத்தின் நிறத்தை மாற்றுகிற இயல்பு உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு, நகத்தின் மேல் கலரே இல்லாத ட்ரான்ஸ்பரண்ட் நெயில் பாலிஷை அப்ளை செய்துவிட்டு, அதன் மேலே நீங்கள் விரும்புகிற டார்க் கலரை அப்ளை செய்துகொள்ளலாம்.

மேலும் நீளமாக நகம் வளர்த்து நெயில் பாலிஷ் போட்டுப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி வைத்திருக்கிறார்கள். இதில் ஒரு விரலில் மட்டும், பாதி நகம் உடைந்து போனால், விரல் அழகே கெட்டு போய்விடும்.

அதனால், நகங்களை விரலுக்குத் தகுந்தபடி போதுமான அளவுக்கு மட்டும் வளருங்கள். அதற்கேற்ப நெயில் பாலிஷை பயன்படுத்துங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

அதிமுகவை பாராட்டும் அண்ணாமலை… டெல்லி விசிட் தந்த மாற்றமா?

ஐடியா இல்லாத மனுஷன் : அப்டேட் குமாரு

பொங்கல் தொகுப்பில் ஏன் பணப்பரிசு இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share