ஹெல்த் டிப்ஸ்: தேமல்… சுயமருத்துவம் வேண்டாமே!

டிரெண்டிங்

தோல் பிரச்சினைகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவது தேமல். இதை கவனிக்காமல் விடும்பட்சத்தில் அதிகரித்து, குணப்படுத்தும் காலத்தை அதிகமாக்கும்.

தேமல் ஏற்பட்டால், அந்த இடத்தில் வெந்நீரை ஊற்றுவது, மஞ்சள், வேப்பெண்ணெய் சேர்த்து அப்ளை செய்வது போன்ற செயல்கள் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கவே செய்யும். உணவுகளுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரித்தால் உடலின் மடிப்புகள் அதிகமாகும். இதனால் வியர்வை அதிகமாகி, தேமலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

தேமலை உடலில் பார்த்தவுடன், சிலர் அவர்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று, அங்கு கொடுக்கப்படும் பூஞ்சைக்கு எதிரான (Anti fungal) மற்றும் ஸ்டீராய்டு களிம்புகளை வாங்கி உடலில் அப்ளை செய்கின்றனர்.

இவை, தேமலை முழுமையாக சரி செய்யாமல், தேமலால் ஏற்படும் அரிப்பை மட்டுமே குறைக்கும். கூடவே, இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும் என்பதால், பூஞ்சைகள் இன்னும் அதிகமாகி தேமல் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. சொல்லப்போனால், சிகிச்சையை தாமதப்படுத்துவதாலும், சுயமருத்துவத்தால் தவறான மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் தேமல் இன்னும் அதிகமாகி, குணப்படுத்துவதை சவால் ஆக்குவதுடன், பரவலும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

தேமல் உட்பட, சருமம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரும மருத்துவரிடம் நேரடியாகச் சென்று, சருமத்தை காட்டி, ஆலோசனை, பரிசோதனை செய்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, அவர் பரிந்துரைக்கும் முறை, கால அளவில் பயன்படுத்த வேண்டும்.

மேலும், இதய நோய், நீண்ட கால உடல் நலப் பிரச்சினைகள் போன்றவை உள்ளவர்களுக்கு, சில வகை பூஞ்சை எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தக் கூடாது என்பதால், அதையும் மருத்துவர் கவனத்தில்கொண்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… ஏர் ஃப்ரையர் சமையல் – நல்லதா? கெட்டதா?

தேர்தல் தேதி அக்கப்போரு: அப்டேட் குமாரு

543க்கு பதில் 544 : தேர்தல் ஆணைய அட்டவணையில் ஒரு தொகுதி கூடியது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *