பியூட்டி டிப்ஸ்: கருந்திட்டுகள் காணாமல் போக!
வெயிலில் செல்லும்போதும், மலைப் பிரதேசங்கள் மற்றும் பீச் போன்றவற்றுக்கு செல்லும்போதும் சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் நம் சருமத்தைத் தாக்கிக் கருமையாக்கும். இதைத்தான் ஹைபர் பிக்மென்டேஷன் (Hyper pigmentation), அதாவது கருந்திட்டுகள் என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
பால், ரோஸ் வாட்டர், வெள்ளரிக்காய் சாறு, ஆப்பிளின் சதை போன்ற குளிர்ச்சியான தன்மைகொண்ட, சருமத்தை எவ்விதத்திலும் பாதிக்காத பொருட்கள் பொதுவாக கருந்திட்டுகளை சரி செய்ய உதவும்.
கடலை மாவு, தயிர், கஸ்தூரி மஞ்சள், கொஞ்சம் தேன் ஆகியவற்றைப் பேஸ்ட் போலக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பாக, கழுத்துக் கருமையை சரி செய்ய இது ஒரு நல்ல வழிமுறையாக உள்ளது. இந்த நிலையில் கருந்திட்டுகள் காணாமல் போக… ஈஸி வழி ஒன்றையும் சொல்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
“பாதாம், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளைக் கொண்டும் கருந்திட்டுகளை சரி செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், சருமத்துக்கு இந்தக் கலவை நல்லதொரு ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.
ஒரு பவுலில் ஒரு கப் சூடான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தலா ஒரு கைப்பிடி அளவு பாதாம், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றைச் சேருங்கள். நன்கு ஊறவிடுங்கள். நன்கு ஊறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஊறவைத்த தண்ணீரையே விட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சருமத்தின் எந்த இடத்தில் கருமை மற்றும் கருந்திட்டுகள் அதிகமாக உள்ளதோ அங்கு இந்த பேஸ்ட்டை மென்மையாகத் தடவுங்கள். பேஸ்ட்டை ஒருமுறை அப்ளை செய்து, அது காயக் காய அதன் மேலேயே இரண்டு, மூன்று கோட் போடுங்கள்.
அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் ஒரு ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து, அதைக் கொண்டு இந்த பேக்கை மென்மையாகத் துடைத்து எடுத்திடுங்கள்.
இதனால் கருந்திட்டுகள் நீங்கியிருப்பதுடன், சருமத்தை தொட்டுப் பார்த்தால் மிகவும் மென்மையாக இருப்பதை உங்களால் உணர முடியும்.
முகத்தின் கருந்திட்டுகள் மட்டுமல்லாது கழுத்து, அக்குள் மற்றும் தொடை இடுக்குகளில் உள்ள கருமையைப் போக்கவும் இந்த நட்ஸ், மற்றும் விதைகளின் விழுது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தப் பேக்கை தினமும் போட்டால் சருமம் மிகவும் எரிச்சலடையும். எனவே, அளவுக்கு அதிகமாக இதைப் பயன்படுத்தக் கூடாது.
புதன், ஞாயிறு என உங்களுக்கு வசதியான வாரத்தில் ஓரிரு நாள் மட்டும் சருமத்தில் அப்ளை பண்ணி வரலாம்.
குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு இதைச் சருமத்தில் அப்ளை பண்ணி ஒரு மென்மையான மசாஜ் கொடுத்துவிட்டு பின்னர் குளிக்கச் செல்லலாம்’’ என்று பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கங்குவா – விற்கு எதிரான ஆதங்கம்… கவுன்சிலருக்கு எதிராக வருவதில்லை ஏன்? : இயக்குநர் கேள்வி!
நயன்தாரா நடிக்கும் ’ராக்காயி’!
மணிப்பூர் கலவரம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த அமித்ஷா
பியூட்டி டிப்ஸ்: குளிர்காலத்திலும் சருமம் பளபளக்க!