கண்களின் ஆரோக்கியம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. சரியான உணவுமுறை, பாதுகாப்பான கண்ணாடி அணிவது, அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு கணிப்பொறி பார்ப்பது, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். How to take care of eyes
மனித உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானதாக, இருக்கும் உறுப்பாக கண்கள் பார்க்கப்படுகிறது.
கண்பார்வையை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள சில எளிய வழிகளை கீழே காணலாம்.
நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது மிக அவசியம். இதற்கு தேவையானது நமது கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை நீண்ட நேரம் பார்ப்பது என்பது கட்டாயமாக உள்ளது. அதனை தவிர்ப்பது கடினம். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நேரடியாக இவற்றை பார்ப்பதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளவும்.
தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதனை செய்வதன் மூலம் கண் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறை இதனை எடுத்துக்கொண்டால் கண் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்ணை பாதுகாக்க வேண்டும். கண்களை கூசும் வெயிலில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். தூக்கம்தான் கண்களுக்கு ஓய்வு தரக்கூடிய விஷயமாக உள்ளது. நல்ல தூக்கம் கண்கள் வறட்சி அடைவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.
சுபஸ்ரீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: தலைக்குக் குளிக்க வெறும் சீயக்காய்த்தூள் மட்டும் பயன்படுத்துவது நல்லதா?
முதிர்ச்சியடைந்துள்ள மக்களாட்சியும், அவசியமற்றுப்போகும் ஆளுநர் பதவியும்!