ஹெல்த் டிப்ஸ்: விரதத்தின்போது மயக்கம்… தீர்வு என்ன?

Published On:

| By Kavi

How to Stop Dizziness during fasting minnambalam health tips

சிலர் உடல்பருமனை உடனே குறைக்க வேண்டும் என்பதற்காக சட்டென்று விரதமிருக்கத் தொடங்குவார்கள். ஆனால், நான்கைந்து மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே லேசாக மயக்கம் வரும். இது எதனால்… இதற்கு என்ன தீர்வு? How to Stop Dizziness during fasting

இவர்கள் பல மாதங்களாக, வருடங்களாக விரதம் இருந்திருக்க மாட்டீர்கள். அதனால் திடீரென எதுவும் சாப்பிடாத நிலையில், உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும்.

சமீப காலமாக பலரும் ‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ என்ற டயட் முறையைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். இவர்கள் தங்களுக்குத் தெரிந்த யாரோ அதைப் பின்பற்றுவதைக் கேள்விப்பட்டு  அதைச் செய்ய நினைப்பார்கள்.

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் என அவரவர் விருப்பத்துக்கேற்ப இடைவெளி எடுத்துக் கொள்வார்கள்.

சிலர் பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் உடல் பலவீனமானது போலவோ, வெலவெலத்துப்போனது போலவோதான் இருக்கும்.

திடமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கும் இடைவெளியில் வெறும் தண்ணீருக்குப் பதில், இளநீர், எலெக்ட்ரால், நீர்மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். இதெல்லாம் உடல் வெலவெலத்துப் போகாமல் காக்கும். மயக்கமும் வராது.

விரதமிருப்பதற்கு முன் உடலானது பழக வேண்டும். முதலில் குறைந்த மணி நேரத்திலிருந்து தொடங்கலாம். இரண்டு, மூன்று முறை அதைப் பின்பற்றினால் உடல் அதற்குப் பழகிவிடும்.

ஆனால், சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலே உடல் வெலவெலத்துப் போவது போல உணர்ந்தால் ரத்தச் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். நமக்கே தெரியாமல் நீரிழிவு பாதித்திருக்கலாம்.

எனவே, முதலில் நீரிழிவுக்கான பரிசோதனை மேற்கொண்டு, ஒருவேளை அது உறுதியானால் முறையான சிகிச்சைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் ‘தாழ்சர்க்கரை நிலை’ இருக்கிறதா என்றும் பாருங்கள்.

நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது.அந்தவகையில் ஒருவேளை நீரிழிவு இருந்தால்,  இப்படி பல மணி நேரம் சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மற்றபடி, சாதாரண நபர்களுக்கு விரதமிருக்கத் தொடங்கிய புதிதில் உடல் பழகும் வரை பலவீனமாக இருக்கும். போகப் போகப் பழகிவிடும். சர்க்கரைத் தண்ணீரோ, சர்க்கரை சேர்த்த ஜூஸோ குடிக்காமல், வெறும் பழச்சாறு குடிக்கலாம். எதற்கும் மருத்துவ ஆலோசனை பெற்று விரதமிருக்கத் தொடங்குவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

நான் அடிச்சா தாங்கமாட்டே… அப்டேட் குமாரு

ஒரு டஜன் மாம்பழம் ரூ.7000-க்கு விற்பனை… அப்படி என்ன ஸ்பெஷல்?

சென்னையில் தொடங்கும் மலர் கண்காட்சி… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

முகூர்த்த நாளில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை!

How to Stop Dizziness during fasting