ஹெல்த் டிப்ஸ்: தொடர் தும்மல்… நிறுத்துவது எப்படி?
தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும். ஆனால் அதுவே நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 50, 60 என அடுக்கடுக்காக தும்மல் போட்டால், அது அலர்ஜியின் காரணமாக வந்ததாக இருக்கலாம்.
தொடர் தும்மலுக்கு ‘அலர்ஜிக் ரைனிட்டிஸ்’ (Allergic rhinitis) எனப்படும் பிரச்னையே காரணம். அதாவது ஒவ்வாமையின் விளைவால் மூக்கின் உள்ளே உள்ள சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறிக்கும் பிரச்னை இது. பலருக்கும் இந்த ஒவ்வாமையானது மூக்கின் உள்சவ்வு அழற்சியோடு மட்டும் நிற்காமல், சைனஸ் என்கிற பாதிப்பையும் ஏற்படுத்தும். மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் ஒவ்வாமையாலும் தும்மல் வரலாம்.
தும்மலுக்கு முதலுதவி என்று எதுவும் இல்லை, தேவையும் இல்லை. என்றாலும், சில சூழ்நிலைகளைத் தவிர்ப்பதன் மூலம் தும்மலைத் தவிர்க்கலாம்.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, மூக்கின் உள்ளே பயன்படுத்தும் நேசல் ஸ்பிரே எடுக்கலாம். மூக்கின் உள்ளே செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள், அலர்ஜிக்கான மருந்துகள் அல்லது இரண்டும் கலந்த கலவை மருந்துகள் உதவியாக இருக்கும். நாள்பட்ட அலர்ஜிக்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தும்மல் வரும்போது மற்றவர்களிடமிருந்து இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.
தும்மும்போது எதிரில் யார் மேலும் நீர்த்திவலைகள் படாத வகையில் கைகளால் மூடியபடி, கீழே குனிந்து தும்மவும்.
சில பேர், சளி பிடித்தால், மூக்குப்பொடியைப் போட்டு செயற்கையாகத் தும்முவார்கள். உடனே கொஞ்சம் ரிலாக்ஸான மாதிரி தெரியும். ஆனால், அப்படி செயற்கையாகத் தும்மலை வரவழைப்பதும், தொடர்ந்து தும்மல் வருவதும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்கா ஒரு ஐடியாவோட வந்துருக்கு போல : அப்டேட் குமாரு
மோடி 3.0 : பதவியேற்ற அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பு: காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதை!
T20 WorldCup : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. இந்திய அணி பேட்டிங்!